அங்கோலா நாட்டில் ஜூலை 28ஆம் நாளன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்குள்ள இ.டி.ஏ. நிறுவனத்தின் முகாமில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில், காயலர்கள் உள்ளிட்ட நிறுவன பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும், அவர்கள் தமக்குள் கட்டித் தழுவி, கைலாகு செய்து, மகிழ்ச்சியையும் - வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
வசூல் செய்யப்பட்ட பித்ரா பணம் - பள்ளிவாசல் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தொழுகைக்குப் பின் அனைவருக்கும் பழங்கள், பாயாசம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. மதியத்திற்குப் பின், அனைவருக்கும் பெருநாள் உணவாக பிரியாணி பரிமாறப்பட்டது.
தகவல்:
M.A.K.ஜாஃபர் அலீ
அங்கோலா - மேற்கு ஆப்ரிக்கா
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) அங்கோலா காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |