கேரள மாநிலம் - கோழிக்கோடு காயலர்களின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
நடப்பாண்டு ரமழான் மாதத்தின்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் வசிக்கும் காயலர்கள் ஏற்பாட்டில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இம்மாதம் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கோழிக்கோட்டிலுள்ள பாளையம் பதர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காயலர்கள், மலையாளிகள் என 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோழிக்கோட்டில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் ஆப்தீன் ஏற்பாட்டில் சுவையான தேனீர், கோழிக்கோடு ஸ்டைல் பிரியாணி அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
பின்னர் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாவு காழீ அலாவுத்தீன் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
கோழிக்கோட்டிலிருந்து...
முஹம்மத் ரஈஸ்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 09:31 / 01.08.2014] |