கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில், இம்மாதம் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, பெங்களூரு காயல் நல மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் இல்லத்தில் பெருநாள் தொழுகை மற்றும் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விடுமுறையில் தாயகம் செல்லாமல் அங்கேயே இருந்த 7 ஆண்கள், 4 பெண்கள் உள்ளிட்ட காயலர்கள் இத்தொழுகையில் பங்கேற்றனர். பெங்களூரு காயல் நல மன்ற துணைப் பொருளாளர் ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர்ரஹ்மான் தொழுகையை வழிநடத்தினார்.
பின்னர் அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய வட்டிலியாப்பம், ரோஸ் மில்க் குளிர்பானம் பரிமாறப்பட்டது. நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற பெருநாள் விருந்தில், அனைவருக்கும் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.
தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறியவர்களாக, அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
தகவல் & படங்கள்:
பெங்களூருவிலிருந்து...
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான்
மற்றும்
‘நேஷனல்’ ஜுல்ஃபிகார் அஹ்மத்
பெங்களூரு காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |