பிறைக் குறித்த விவாதங்களில், ஒரு சிலரால், அமாவாசை எனக்கூறப்படும் நாளில், உலகில் எங்கும் தேயும் பிறையையோ,
வளரும் பிறையையோ காண முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
அமாவாசை தினம் எனக்கூறப்படும் தேதியில் - அமாவாசை நிகழும் நேரத்தை பொறுத்து, உலகின் சில பகுதிகளில் தேயும்
பிறையையோ அல்லது உலகின் சில பகுதிகளில் வளரும் பிறையையோ காணலாம் என்பது விஞ்ஞானப்பூர்வமான உண்மை.
இதனை உணர்த்தவே காயல்பட்டணம்.காம், ஜனவரி 29, 2014 அன்று செய்தி
ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் ஜனவரி 30 (இங்கிலாந்து நேரப்படி அமாவாசை தினம்) அன்று தேயும் பிறையை
காணலாம் என்ற செய்தியையும், ஜனவரி 31 அன்று அவ்வாறு ஈரான் நாட்டில்
காணப்பட்ட செய்தியையும் வெளியிட்டிருந்தது.
அமாவாசை தினம் எனக்கூறப்படும் நாளில் பிறையை காண ஜூலை 26 மற்றொரு வாய்ப்பினை தருகிறது.
இது குறித்த செய்தியினை காயல்பட்டணம்.காம், ஜூலை 24 அன்று வெளியிட்டிருந்தது.
ஜூலை 26 அன்று காலை 6:40 மணியளவில் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் தேயும் பிறை
வெறுங்கண்ணால் பார்க்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தினை Moonsighting.com இணையதளம் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம் எடுக்கப்படும் போது, சூரியன் - சந்திரன் இடையிலான இடைவெளி (ELONGATION) சுமார் 12.90 டிகிரி ஆகும்.
மேலும் அதே தினத்தில், இந்தோனேசியா நாட்டிலும் தேயும் பிறை - குபங் என்ற பகுதியில்
காணப்பட்டதாக, Icoproject.org இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
|