ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று (ஜூலை 29) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
பெருநாளை முன்னிட்டு, ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பில், இன்று காலை 09.30 மணியளவில், ஜெய்ப்பூர் நகரிலுள்ள முஹல்லா பிஸாத்தியானில் அமைந்திருக்கும் தகாடியா மஸ்ஜிதில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
மவ்லவீ ஹாஃபிழ் அபுல் ஹஸன் மஷீஷ் காஷிஃபீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்,
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் ஃபாஸீ, பெருநாளின் சிறப்புகள் குறித்து தமிழில் சொற்பொழிவாற்றினார்.
தொழுகை மற்றும் குத்பா பேருரை நிறைவுற்றதும், ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித், ஹாஃபிழ் எம்.ஏ.சி.அஹ்மத் தாஹிர் ஆகியோர் கிராஅத் ஓதினர்.
இந்நிகழ்ச்சிகளில் ஜெய்ப்பூர் வாழ் காயலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் M.A.C.முஜாஹித் (மும்பை) மூலமாக
ஹாஃபிழ் S.M.ஷெய்க் அலீ நுஸ்கீ
ஒருங்கிணைப்பாளர்
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா)
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |