காயல்பட்டினம் தாயிம்பள்ளியில் இன்று காலை 09.30 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் இமாம் அஹ்மத் காஸிம் தொழுகையை வழிநடத்த, முஅத்தின் ஷம்ஸ் அலியார் குத்பா உரை நிகழ்த்தினார்.
இத்தொழுகையில், பள்ளி நிர்வாகிகளான எம்.எம்.அஹ்மத், ஏ.கே.யாஸீன் மவ்லானா, கே.எம்.தவ்லத், நியாஸ், ஜித்தா காயல் நற்பணி மன்ற இணைச் செயலாளர் எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். இப்னு அப்பாஸ், கவிஞர் ஏ.ஆர்.தாஹா, காயல்பட்டினம் நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், நகர்மன்றத் தலைவரின் கணவர் ஷேக் அப்துல் காதிர், ஹாங்காங் - கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாஈல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் எம்.எச்.அப்துல் வாஹித் உட்பட அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், பள்ளி நலனுக்காக நன்கொடை நிதி சேகரிக்கப்பட்டது. 27 ஆயிரத்து 145 ரூபாய் சேகரமானது.
தொழுகை நிறைவுற்றதும், அவர்கள் தமக்கிடையில் கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
மஹ்மூத் ஹஸன் (mammash)
தாயிம்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |