காயல்பட்டினத்தில், இன்று 20.30 மணியளவில் நோன்புப் பெருநாள் அறிவிப்பு வெளியானது.
மஃரிப் வேளையிலிருந்து, பெருநாள் அறிவிப்பு வரும் வரை, கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன. இறைச்சிக் கடைகளில், அறுப்பதா - வேண்டாமா என அறிவிப்பை எதிர்பார்த்து, கடையைத் திறந்து வைத்துக் காத்திருந்தனர் அதன் உரிமையாளர்கள்.
பெருநாள் அறிவிப்பு வந்ததும், காயல்பட்டினம் பிரதான வீதி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை ஆகிய வீதிகள் கடும் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாயின. பேருந்துகள் அங்குலம் அங்குலமாக நகரும் நிலை ஏற்பட்டது. கிடைத்த இடைவெளியில், இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற இளசுகள் பெரிசுகள் வாயால் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று விடுமோ என்றஞ்சிய பொதுநல ஆர்வலர்கள் சிலர் ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளருக்குத் தகவல் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் சில காவலர்கள் பிரதான வீதிக்கு வந்து, போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
பெருநாள் இரவை முன்னிட்டு, நகரில் தொப்பிக் கடைகள், ஆயத்த ஆடையகங்கள், செருப்புக் கடைகள், வாசனைத் திரவிய கடைகள், இறைச்சிக் கடைகள் என அனைத்துக் கடைகளும் பரபரப்புடன் காணப்படுகிறது.
பெருநாள் இரவு கடைவீதிக் காட்சிகள் வருமாறு:-
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நோன்புப் பெருநாள் இரவுக் காட்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |