ஆப்ரிக்கா கண்டத்தின் தென் மேற்கு கோடியில் உள்ள நாடு அங்கோலா. போர்சுகல் நாட்டின் கட்டுப்பாட்டில் பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த நாட்டில் பெருவாரியான மக்கள் கிருஸ்துவர்கள் ஆவர். இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 2 கோடி.
18 மாகாணங்கள் கொண்ட இந்த நாட்டில் 80 பள்ளிவாசல்கள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் 500,000 இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையாக கொண்ட இ.டீ.ஏ. நிறுவனம் அங்கோலாவில் திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் நடக்கும் மாகாணத்தில் பள்ளிவாசல்கள் ஏதும் இல்லை. இந்நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியா, பங்களாதேஷ் முஸ்லிம் பணியாளர்கள் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக - இ.டீ.ஏ. முகாமிலேயே தொழுகை நடத்திட பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் காயலர் உட்பட ஏராளமான் இந்திய, பங்களாதேஷ் பணியாளர்கள் நோன்பு துறந்தனர். பேரீத்தப்பழம், கஞ்சி, பழங்கள், ஜூஸ், கட்லெட் அல்லது வடை, இனிப்பு பண்டங்கள் ஆகியன பரிமாறப்பட்டன.
தகவல்:
M.A.K.ஜாஃபர் அலீ
அங்கோலா, தென் மேற்கு ஆப்ரிக்கா
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) அங்கோலா நாட்டில் - காயலர்களும் பங்கேற்க நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |