காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில், ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் மற்றும் மார்க்க அறிஞர்களான ஆலிம்கள் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ரமழான் 28ஆம் நாளில் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு நிகழ்ச்சி இம்மாதம் 27ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) 17.30 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு - நகரின் அனைத்து பள்ளிவாசல்களிலும் முத்தவல்லிகளாகவும், நிர்வாகிகளாகவும் வாழ்ந்து மறைந்த முன்னோர் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பெரிய குத்பா பள்ளியின் இமாம் மவ்லவீ என்.எம்.ஓ.அப்துல் காதிர் அதனை வழிநடத்தினார்.
காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு குறித்து, ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் அறிமுகவுரையாற்றினார்.
எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, ஹாஃபிழ் முஹம்மத் ஹஸன் இர்ஃபான் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
பின்னர் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், நோன்புக் கஞ்சி, வடை வகைகள், குளிர்பானம், கடற்பாசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பரிமாறப்பட்டது.
நிகழ்வுகளனைத்திலும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 150 ஹாஃபிழ்கள் - ஆலிம்கள் உட்பட சுமார் 350 பேர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஒருங்கிணைப்பில், அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
மற்றும்
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ
படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) குத்பா பெரிய பள்ளியில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு சிறப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |