காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் இன்று காலை 09.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, அபூதபீ காயல் நல மன்ற தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
கலந்துகொண்டோர்:
இத்தொழுகையில், பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், செயலர் எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ, தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் உறுப்பினர் கானாப்பா செய்யித் அஹ்மத், கத்தர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் ‘கவிமகன்’ காதர், கவிஞர் நெய்னா, நகர பிரமுகர்களான என்.எஸ்.நூஹ் ஹமீத், என்.டி.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, எஸ்.எச்.முஹம்மத் நூஹ் உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
மக்கள் திரள்:
இவ்வாண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்காக, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஊர் வந்திருந்தமையால், பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளி வராண்டா, கீழ்ப்பள்ளி என அனைத்துப் பகுதிகளும் நிரம்பியதால், சிலருக்கு தொழுகையில் பங்கேற்க வாய்ப்பின்றி போனது.
பின்னர் அவர்களுக்காக தனியாக தொழுகை நடத்தப்பட்டது. ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன் அத்தொழுகையை வழிநடத்தினார்.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
நிறைவில் நண்பர்கள் கூடி குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!]
பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. மொத்தம் 21 ஆயிரத்து 600 ரூபாய் சேகரமானது.
ஜியாரத் நிகழ்ச்சி:
பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |