இன்று (ஜூலை 29) நோன்புப் பெருநாள் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
பெருநாளை முன்னிட்டு, அவ்வமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை, காலை 07.30 மணியளவில் நடத்தப்பட்டது. ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையும் ஆற்றினார்.
நிகழ்வுகள் அனைத்திலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட - நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், தாஹா ஹாஜி, எஸ்.எம்.மூஸா ஹாஜி, மரைக்கார் ஆலிம், எல்.எஸ்.அன்வர், டாக்டர் அபுல்ஹஸன் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தொழுகை நிறைவுற்ற பின்னர், ஏழைகள் துயர்துடைக்கும் நலநிதிக்காக ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 36 ஆயிரத்து 600 தொகையும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 36 ஆயிரத்து 190 தொகையும் என மொத்தம் 72 ஆயிரத்து 790 ரூபாய் தொகையும், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் நன்கொடையாகப் பெறப்பட்டது.
தகவல்:
S.ஷம்சுத்தீன்
தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |