காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியில் இன்று காலை 09.30 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பள்ளியின் இமாம் தை.மு.க.முத்து செய்யித் அஹ்மத் தொழுகையை வழிநடத்தினார்.
இத்தொழுகையில், பள்ளி நிர்வாகிகள், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் நெட்காம் புகாரீ, மதிமுக நகர நிர்வாகி எம்.ஏ.காதர் ஒலி, கே.எம்.டி. மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் ரஹ்மத்துல்லாஹ் உட்பட அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும், அவர்கள் தமக்கிடையில் கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
M.A.இஃஜாஸ் மீரான்
மரைக்கார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |