ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் நேற்று (ஜூலை 28) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் துபை நகரில் வசிக்கும் காயலர்கள், தேரா துபையிலுள்ள ஈத்கா திடலில் அன்று அதிகாலையில் தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். காட்சிகள் வருமாறு:-
தொழுகை நிறைவுற்றதும், காயலர்களுள் ஒரு சாரார், தமது வசிப்பிடத்தில் இணைந்தமர்ந்து பெருநாள் உணவுண்டனர். இடியாப்பம், புரோட்டா, களறிக் கறி, வட்டிலியாப்பம், ஜவ்வரிசி கஞ்சி ஆகியன அவர்களது பெருநாள் உணவுப் பட்டியலாகும்.
தகவல் & படங்கள்:
துபையிலிருந்து...
M.S.அப்துல் ஹமீத்
மற்றும்
M.சுல்தான்
நடப்பாண்டு துபை காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) துபை காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்திகளை பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்:-
பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 |