காயல்பட்டினம் புதுப்பள்ளியில் இன்று காலை 09.30 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. ஹாஃபிழ் பி.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை தொழுகையை வழிநடத்த, பி.எம்.எஸ்.நஈம் உதுமான் குத்பா உரை நிகழ்த்தினார்.
இத்தொழுகையில், பள்ளி நிர்வாகிகளான எஸ்.எம்.உஸைர், ஏ.எஸ்.அஷ்ரஃப், எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, எம்.எல்.ஹாரூன் ரஷீத், பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இம்ரான் உஸைர், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் உட்பட அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில், பள்ளி நலனுக்காக நன்கொடை நிதி சேகரிக்கப்பட்டது.
தொழுகை நிறைவுற்றதும், அனைவரும் தமக்கிடையில் கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் பள்ளியையொட்டியுள்ள மஹான்களின் மண்ணறைகளை ஜியாரத் செய்த பொதுமக்கள், முரசு (டங்கா) முழங்க, ஸாஹிப் அப்பா தைக்கா வரை தெருவலமாகச் சென்றனர். அங்கு ஸலாம் பைத் படித்து, துஆ இறைஞ்சிய பின் தமதில்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
தகவல்:
பாளையம் ஸதக்கத்துல்லாஹ்
படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
புதுப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |