காயல்பட்டினம் அப்பா பள்ளியில் வழமை போல நடப்பாண்டு ரமழான் மாதத்திலும், அப்பள்ளி இமாமுடன் இணைந்து அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்தினர்.
அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நேற்று (ஜூலை 27) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. டாக்டர் அபுல்ஹஸன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். எம்.ஐ.மெஹர் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பின்னர், நடப்பாண்டு ரமழான் இரவுத் தொழுகையை வழிநடத்திய மாணவர்களுக்கு, அப்பாபள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினரும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, அதன் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் ஆகியோரும் ஊக்கப்பரிசுகளை வழங்கினர். பள்ளியின் இமாம் ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ சிறப்புப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில், அப்பாபள்ளி ஜமாஅத் பொதுமக்கள் கலந்துகொண்டு, தொழுகை நடத்திய மாணவர்களை வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
படங்கள்:
J.காஸிம்
அப்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரமழான் இரவுத் தொழுகை நடத்தியோருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |