ஆறாம்பள்ளி:
காயல்பட்டினம் பிரதான வீதியில், ஆறாம்பள்ளித் தெருவை அணைத்தாற்போல் அமைந்துள்ளது மஸ்ஜிதுஸ் ஸாதிஸ் எனும் ஆறாம்பள்ளிவாசல். இப்பள்ளியின் பெயராலேயே அதனையொட்டிய தெரு ஆறாம்பள்ளித் தெரு என்றழைக்கப்படுகிறது.
நிர்வாகம்:
ஹாஜி ஜெ.எஸ்.செய்யித் முஹம்மத் பள்ளியின் தலைவராகவும், ஹாஜி டூட்டி டாக்டர் மஹ்பூப் சுபுஹானீ, ஹாஜி ஏ.எச்.நெய்னா ஸாஹிப் (வாவு) ஆகியோர் துணைத்தலைவர்களாகவும், ஹாஜி மு.த.ஜெய்னுத்தீன் செயலாளராகவும், ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் துணைச் செயலாளராகவும், ‘மாஷாஅல்லாஹ்’ ஹாஜி எஸ்.ஏ.கே.ஷேக் தாவூத் பொருளாளராகவும்,
ஹாஜி ச.த.சதக்கத்துல்லாஹ்,
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்,
எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்,
ஹாஜி ஓ.ஷாஃபிஈ,
மவ்லவீ ஹாஃபிழ் ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித் முஹம்மத்,
ஹாஜி டூட்டி சுஹ்ரவர்தி,
ஹாஜி ஜெ.எஸ்.முஹம்மத் அலீ,
ஹாஜி ஹஸன் இன்ஜினீயர்,
ஆகியோர் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
எம்.ஏ.செய்யித் இப்றாஹீம் பள்ளியின் இமாமாகவும், எம்.எச்.காழி அலாவுத்தீன் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் தொழுகையை, காயல்பட்டினம் புதுக்கடைத் தெரு - பழம்பாக்கு குடும்பத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் இஸ்ஹாக் ரிதா, கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் டூட்டி ஷம்சுத்தீன் ஸூஃபீ ஆகியோர் பொறுப்பேற்று வழிநடத்தினர்.
தொழுகை நேரம்:
ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடைபெற்றது.
நோன்புக் கஞ்சி:
வழமை போல நடப்பாண்டிலும், இப்பள்ளியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மாலையில் ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது. இதனை அந்த மஹல்லாவைச் சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினரும், வணிக நிறுவனங்களைச் சார்ந்தோறும் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் நிகழ்ச்சி:
இங்கு நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை, அவ்வப்போது குளிர்பானம் பரிமாறப்படுகிறது.
21.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் ‘மாஷாஅல்லாஹ்’ செய்யித் முஹம்மத்
ஹிஜ்ரீ 1433இல், ஆறாம்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஆறாம்பள்ளியின் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஆறாம்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |