ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 2) காலை - அப்பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கே.ஏ.மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எல்.ராஜாமணி, பேயன்விளை ஹிந்து துவக்கப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அழகேசன், ஆறுமுகநேரி முன்னாள் நகர அ.தி.மு.க. செயலாளர் அமிர்தராஜ், கே.ஏ. மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன், சமூக ஆர்வலரும், இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான (1961-63) லேண்ட்மார்க் ஹாஜி ராவணா அபுல் ஹசன், நகர்மன்றத் தலைவரின் கணவர் எம்.எம்.சேக் அப்துல் காதர் ஆகியோர் உட்பட பலர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினர்.
தகவல்:
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபித் சேக் உடைய
முகநூல் பக்கம் (https://www.facebook.com/aabidha.shaik)
|