ஹாங்காங் நாட்டில் 29.07.2014 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் காயலர்கள் அவரவர் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
ஹாங்காங் நாட்டின் துங்சுங் நகரம் ஒரு மலைப்பகுதியாகும். ஹாங்காங் கவ்லூனிலிருந்து சுமார் 1 மணி நேர பேருந்துப் பயணத்தில் இந்நகரை அடைய முடியும். கவ்லூனில் பணிபுரியும் காயலர்கள் சிலர், அங்குள்ள பன்மடங்கு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவினங்களைத் தவிர்ப்பதற்காகவும், இதமான இயற்கைச் சூழலுடன் வாழ்வதற்காகவும் துங்சுங் நகரில் வாடகைக்கு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, ஹாங்காங் நாட்டின் மலைப்பகுதியான துங்சுங் நகரில் வசிக்கும் காயலர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் பன்னாட்டு முஸ்லிம்களுடன் இணைந்து பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின், அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் காயலர்கள் அனைவரும், காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.ஆர்.காதிர் ஸாஹிப் இல்லத்தில் ஒன்றுகூடினர். அங்கு சிற்றுண்டியுடன் இன்பமாக பொழுதைக் கழித்தவர்களாக விடைபெற்றுச் சென்றனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங் - துங்சுங் நகரிலிருந்து...
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பெருநாளின்போது ஹாங்காங் - துங்சுங் காயலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹிஜ்ரீ 1433 நோன்புப் பெருநாளின்போது ஹாங்காங் - துங்சுங் காயலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |