கத்தர் நாட்டில் 28.07.2014 அன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டில் வசிக்கும் காயலர்கள் அவரவர் பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா - தொழுகைத் திடல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, கத்தர் வாழ் காயலர்கள் பலர் - தமது விருந்தினர்களாக அங்கு வந்திருந்த சஊதி வாழ் காயலர்களுடன் இணைந்து, கத்தரிலுள்ள AQUA PARK, கடை வீதிகள், கடற்கரை ஆகிய இடங்களுக்கு இன்பச் சிற்றுலா சென்றனர். அங்குள்ள தண்ணீர் விளையாட்டு அம்சங்களில் இன்பமாகப் பொழுதைக் கழித்துவிட்டு, கடை வீதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு, கடற்கரையில் அரட்டையில் ஈடுபட்டனர். தமக்கிடையில் பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
பெருநாளுக்கென ஆயத்தம் செய்திருந்த சிறப்புணவுகளை இணைந்தமர்ந்து உண்டவர்களாக, மறக்க முடியா நினைவுகளுடன் இரவு வேளையில் அவர்கள் யாவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இச்சிற்றுலாக் குழுவில் குடும்பத்தினருடன் 3 காயலர்களும், தனித்தவர்களாக 5 காயலர்களும், மழலையரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
கத்தரிலிருந்து...
முஹம்மத் முஹ்யித்தீன்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நோன்புப் பெருநாளின்போது கத்தர் காயலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |