காயல்பட்டினத்திலுள்ள - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் நலனுக்காக, காயல்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியையொட்டி ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் முறைப்படியான துவக்க விழா, 31.07.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.ஏ.உமர் ஃபாரூக் அஃளம் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்களான ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக், அப்துல் வதூத் ஆகியோர் அரபி பாடல் பாடினர். ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ வரவேற்புரையாற்றினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையுரையாற்றினார். ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் விழா அறிமுகவுரையாற்றினார்.
அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழா ஏற்பாட்டாளர் ஏ.டபிள்யு.ஹிழ்ரு முஹம்மத் ஹல்லாஜ் நன்றி கூறினார். மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் திரளாகக் கலந்துகொண்டனர். விழா நிகழ்ச்சிகளை எம்.எல்.ஷேக்னா லெப்பை நெறிப்படுத்தினார்.
ஹாஃபிழ்கள் கூட்டமைப்பில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம் விழாவின்போது ஹாஃபிழ்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
நகர ஹாஃபிழ்கள் இப்படிவத்தைப் பூர்த்தி செய்து, kayalhafilulquran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தருமாறு விழாவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஹாஃபிழ்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டு, விழாவில் அறிவிக்கப்பட்டனர்:-
தலைவர்:
மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர்
துணைத்தலைவர்:
அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல் வதூத்
செயலாளர்:
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப்
துணைச் செயலாளர்கள்:
(1) ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ
(2) ஹாஃபிழ் எஸ்.கே.ஏ.நத்தர் ஸாஹிப்
பொருளாளர்:
ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்
ஒருங்கிணைப்பாளர்:
அல்ஹாஜ் எம்.எல்.ஷேக்னா லெப்பை
துணை ஒருங்கிணைப்பாளர்கள்:
(1) அல்ஹாஜ் ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா
(2) ‘ஸபஉ காரீ’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.செய்யித் முஹம்மத் தாவூதீ
கவுரவ ஆலோசகர்கள்:
(1) மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ
(2) அல்ஹாஜ் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ
(3) மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ
(4) மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(5) ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.ஷெய்கு அப்துல் காதிர்
ஏற்பாட்டாளர்:
அல்ஹாஜ் ஏ.டபிள்யு.ஹிழ்ரு முஹம்மத் ஹல்லாஜ்
செய்தி தொடர்பாளர்:
‘ஸபஉ காரீ’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.செய்யித் முஹம்மத் தாவூதீ
அனைத்துலக ஹாஃபிழ் பிரதிநிதிகள்:
(01) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ (ஹாங்காங்)
(02) மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (சிங்கப்பூர்)
(03) ஹாஃபிழ் செய்யித் இப்றாஹீம் (மலேஷியா)
(04) மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.ஏ.உமர் ஃபாரூக் அஃளம் மஹ்ழரீ (இலங்கை)
(05) ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் (சஊதி அரபிய்யா - மக்கா முகர்ரமா)
(06) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ (ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ)
(07) மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ (ஐக்கிய அரபு அமீரகம் - துபை)
(08) மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ (கத்தர்)
(09) ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்க் கல்ஜீ (குவைத்)
(10) ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் (சஊதி அரபிய்யா - ரியாத்)
காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |