தூத்துக்குடி மாவட்ட நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் விநியோகத்தை மாவட்ட செயலாளர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.
திமுகவின் 14ஆவது கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூர்களுக்கான தேர்தல் முடிந்துள்ளது. தற்போது நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 19 ஒன்றியங்கள், 2 நகரங்களுக்கான அவைத்தலைவர், செயலாளர், 3 துணை செயலாளர்கள், பொருளாளர் மாவட்ட பிரதிநிதி ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு விண்ணப்பங்களை கலைஞர் அரங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட செயலாளர் பெரியசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து வேட்புமனு விண்ணப்பபடிவங்கள் விநியோகிக்கும் பணி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதனை மாவட்ட செயலாளர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ராஜ்மோகன் செல்வின், புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், கழுகுமலை பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட முழுவதிலிமிருந்து ஏராளமான திமுகவினர் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இம்மாதம் 03ஆம் நாள் வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.
03ஆம் நாளன்று 10.00 மணி முதல் 18.00 மணி வரை நடைபெற்ற - வேட்பு மனுக்களைப் பெறும் நிகழ்ச்சிக்கு, திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார். திமுக தலைமை அலுவலகத்திலிருந்து பிரதிநிதியாக அனுப்பப்பட்டிருந்த இளங்கோவன் வேட்பு மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
காயல்பட்டினம் திமுக நகர செயலாளர் பொறுப்பிற்கு, அக்கட்சியின் நடப்பு நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மு.த.ஜெய்னுத்தீன் வேட்பு மனு தாக்கல் செய்த காட்சி:-
படம்:
தினத்தந்தி நாளிதழ்
எம்.என்.சொளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த காட்சி:-
படம்:
A.K.முஹம்மத் முகைதீன் (மம்மி ஹாஜியார்) |