காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், அப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 22.00 மணி வரை, திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி 3 பிரிவுகளாக நடத்தப்படவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை காயல்பட்டினம் நகரின் அனைத்து மத்ரஸாக்கள், பள்ளிக்கூடங்கள், பொதுநல அமைப்புகள், காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு ஆகிய இடங்களில் நேரில் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகரின் மத்ரஸாக்களிலும், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிக்கூடங்களிலும் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில், ‘மக்கா’ செய்யித் இப்றாஹீம், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, குளம் கே.எஸ்.முஹம்மத் யூனுஸ் ஆகியோர் நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.
போட்டி குறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பிரசுரம்:-
05 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள், 30 ஜுஸ்உகள் என 3 பிரிவுகளாக நடத்தப்படும் இப்போட்டியில்,
05 ஜுஸ்உகளைக் கொண்ட முதல் பிரிவிற்கான முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூபாய் 7 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம் பணப்பரிசுகளும்,
15 ஜுஸ்உகளைக் கொண்ட இரண்டாம் பிரிவிற்கான முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூபாய் 10 ஆயிரம், 7 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுகளும்,
30 ஜுஸ்உகளைக் கொண்ட மூன்றாம் பிரிவிற்கான முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூபாய் 15 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் பணப்பரிசுகளும்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி குறித்த மேலதிக விபரங்களை, பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.நூஹ் அல்தாஃபீ-யை +91 82209 08175 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
குளம் K.S.முஹம்மத் யூனுஸ்
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |