காயல்பட்டினம் நகராட்சி உட்பட தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களில் உள்ள காலி இடங்களுக்கான இடைதேர்தல் அறிவிப்பு நேற்று வெளியானது.
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நடைபெறவேண்டிய தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணி முழுமையாக நிறைவுபெறவில்லை என்றும், புதிதாக வாக்குச்சாவடிகள் முடிவு செய்யவேண்டும் என்றும் - இப்பணிகளை முடிக்க ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம் வேண்டும் என்றும் - கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர், தமிழக அரசின் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து - தேர்தல் ஆணையம், உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தலை மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 2:25 pm / 07.08.2014]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross