மகுதூம் ஜும்ஆ பள்ளி:
காயல்பட்டினம் மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு ஆகிய ஐந்து தெருக்களையும் அரவணைத்தாற்போல் அமைந்துள்ளது மகுதூம் ஜும்ஆ பள்ளிவாசல்.
நிர்வாகம்:
ஹாஜி வி.எம்.ஏ.நூஹ் ஸாஹிப் இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் துணைத் தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ இப்பள்ளியின் இமாமாகவும், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீஃப் என்ற இளைஞர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர். யாக்கூத் என்பவர் பள்ளி பராமரிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியின் நடப்பாண்டு தராவீஹ் (ரமழான் சிறப்புத்) தொழுகையை காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் நூஹ் ரியாஸ், தீவுத்தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் நூஹ் ஸாஹிப் ஆகியோர் இணைந்து பொறுப்பேற்று வழிநடத்தினர்.
தொழுகை நேரம்:
ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடைபெற்றது.
நோன்புக் கஞ்சி:
தினமும் மாலையில் வினியோகிக்கப்பட்ட ஊற்றுக் கஞ்சியை இந்த ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 150 முதல் 200 குடும்பத்தினர் வரை பெற்றுச் சென்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 60 முதல் 90 பேர் வரை கலந்துகொண்டனர். 08.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
ஹிஜ்ரீ 1433இல், மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |