வெட்டு ஒன்னு! துண்டு ரெண்டு!! posted byS.K.Salih (Kayalpatnam)[05 August 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 36250
வெட்டு ஒன்னு! துண்டு ரெண்டு!! இதுவே மறைந்த ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடித்த வணிக முறை.
கடையில் கைலி எடுக்கச் சென்றால், பேரம் பேச அவசியமே இல்லை. “இதுதான் ரேட்! விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!” என முகம் கடியாமல் கூறி வணிகம் செய்தவர்கள்.
300 ரூபாய் பொருளை 350 என்று சொல்லி, “உங்களுக்காக 50 ரூபாய் குறைக்கிறேன்...” பேர்வழிகளுக்கிடையில், உள்ளதைச் சொல்லி, நல்ல முறையில் வணிகம் செய்ததால், ஸாலிஹ் ஸ்டோருக்கென்றே அசைக்க முடியாத வாடிக்கையாளர் கூட்டம் இன்றளவும் உண்டு.
பல குணங்களையும், கொள்கை - கோட்பாடுகளையும் கொண்ட மக்களைக் கொண்ட நமதூரில், பல ஆண்டுகளாக ஒரு வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல! அசாத்திய திறமை கொண்டவர்கள் மட்டுமே அதைச் சாதிக்க இயலும். அதில் முதன்மையான திறமையாளர்களுள் ஸாலிஹ் ஹாஜியார் அவர்களும் ஒருவர். நானறிய தன் நிறுவனத்தில் ஒரு நாள் கூட எந்த சர்ச்சைகளுக்கும் இடமளிக்கவில்லை.
வறுமையை மறைத்து வாழ்ந்த பலருக்கு, தன் நிறுவனத்திலிருந்து - அக்காலத்திலேயே பல ஆயிரம் ரூபாய்களுக்கு சாமான்களைக் கடனாகக் கொடுத்து, அழகிய முறையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொண்ட பாங்கு அவர்களுக்கே உரியது. இச்சேவையால், காசில்லா நிலையிலும் புத்தாடைகளுடன் பெருநாளை மகிழ்வுறக் கொண்டாடிய குடும்பங்கள் நமதூரில் ஏராளம்... அவர்களின் வலிமையான துஆக்களெல்லாம் மர்ஹூம் அவர்களுக்குத் துணை நிற்கட்டும்!
மகத்தான திறமைகளைத் தன்னகத்தே கொண்டிருந்த கண்ணியவான் இன்று நம்மோடு இல்லை... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் மாமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்
அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
அன்னாரின் தனித்திறமைகளை அப்படியே தமக்குள் கொண்டு, பழமை வாய்ந்த ஸாலிஹ் ஸ்டோரை அதன் தொன்மை சிதையாமல் சிறப்புற கொண்டு செல்ல அவர்களது மக்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, ஆமீன்.
ஸாலிஹ் ஹாஜியார் அவர்கள் மர்ஹூம் செய்யித் ஆலிம்சா அவர்களின் தம்பி என்பது அவர்களின் மறைவுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross