செய்தி: தேர்தல் 2011: அதிமுக-தேமுதிக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி! காயல்பட்டினம் பரப்புரைக் கூட்டத்தில் நடிகர் பாக்யராஜ் பேச்சு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தேர்தல் கருத்து கணிப்பு - திமுக கடையை சாத்துகின்ற நேரம் வந்து விட்டது !! posted bySalai.Mohamed Mohideen (California)[29 March 2011] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 3630
அதிமுக-தேமுதிக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி... ஒருவேளை தேமுதிக திமுக வுடன் சேர்ந்து இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள். அது மட்டும் தெய்வ கூட்டணியா?? நீங்கள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். என்ன ஒரு வித்தியாசம் அவர்கள் சில கோடிகளில் கொள்ளை அடித்தார்கள் இவர்கள் லட்சக்கோடியில் புரண்டு கொண்டு இருக்கிறார்கள்.
இதில் பெரியா வினோதம் என்ன என்றால்... மக்களுடைய வரி பணத்தில் மக்களுக்காக சலுகை (டிவி/ஒரு ரூபாய்க்கு அரிசி) என்ற பெயரில் சில கோடிகளை செலவு செய்து விட்டு, பல ஆயிரம் கோடிகளை சுருட்டியதொடு மட்டும் இல்லாமல் நம் நாட்டுக்கு பல லட்சம் கோடி நஷ்டத்தை ஏட்படுத்தியது ஒரு மிக பெரிய சாதனையா?? படிக்காத ஒரு சில பாமரர்களை வேண்டும் என்றால் நீங்கள் ஏமாத்தி விடலாம்... ஏன் இலவசம் என்று ஒரு பெரிய லிஸ்ட் கொண்டு வந்து நம் மக்களுடைய ஏழ்மையை மீண்டு பயன்படுத்தி விடலாம் என்ற மனக்கணக்கு போட்டு விடாதீர்கள். மக்கள் எப்பொழுதுமே ஏமாளியாக இருக்க மாட்டார்கள்.
கீழே உள்ள லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி நடக்கின்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தால் ஊழல் ஆட்சிக்கு எங்கேயோ சாவு மணி அடிப்பது போல் தெரிகிறது.
http://www.lensonnews.com/poll_detail.php?qID=௭
தயவு செய்து இலவசம் என்று பெயரில் நமது மக்களை மேலும் ஏழ்மையானவர்களாக ஆக்கிவிடாதிர்கள். எப்போதுமே மீன் பிடித்து கொடுப்பதைவிட மீன் பிடிக்க கற்று கொடுங்கள். தரமான கல்வி, அநாதை பிள்ளைகள்/முதியவர்கள் வாழ்க்கை மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு போன்ற ஏகப்பட்ட சமாச்சாரங்கள் (பாக்கியராஜ் பாணியில் சொன்னால்) இருக்கின்றது.
சகோ. இப்ராகிம் சொன்னது போல் "பட்டி காட்டான் மிட்டாய் கடையை பார்த்தா மாதிரி " முருங்கக்காய் புகழ் அண்ணன் பாக்கியராஜ் அவர்களை பார்க்க வந்து இருக்கிறார்கள். நம் ஊர் காரர்கள் மட்டும் விதி விளக்கா என்ன. சினிமா நம்மவர்களையும் விட்டு வைக்கவில்லையே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross