நமது குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த தூண் சாய்ந்து விட்டது.
நமதூரின் மூத்த பெண்மணிகளுள் ஒருவர்... எனது அருமை தாயாரின் மிகவும் நெருங்கிய நண்பி . என் அருமை தோழிமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஒரு சிறந்த பெண் ஆலிமா !
சிறந்த வணக்கசாலி !
ஈகை உள்ளம் கொண்டவர் !
மார்க்க விசயங்களில் மிகவும் பேணுதல் உடையவர் !
குடும்ப விசயங்கள் , பழைய காலத்து சரித்திரங்கள் , சன்மார்க்கத்தின் நுணுக்கமான ,தெளிவான விசயங்களை மிகவும் அறிந்தவர்கள் ! .
ஆழமான ஞாபக சக்தி உள்ளவர்கள் !
யாரையும் தேடி செல்லமாட்டார்கள் . அவர்களின் உடல் அமைப்பும், தேக ஆரோக்கியங்களும் அப்படி !
ஆனால் அவர்களை அனைவரும் தேடி வருவார்கள் !
வந்தவர்களுக்கு வயிறு நிறைய தீனும், உள்ளம் நிறைய (Dheenum) கிடைக்கும்!
அல்லாமா நஹ்வி அப்பா , சொளுக்கார் அப்பா , கண்ணாடி ஆலிம் மற்றும் பெரும்பெரும் உலமாக்களின் சரித்திர நிகழ்வுகளை அறிந்து வைத்துகொண்டு அதனை பிறருக்கும் மிகவும் விருப்பமாக சொல்லிக் காட்டுவார்கள்
அரபுத் தமிழ் தஃப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) , புர்தா ,வித்ரியா , வேதப் புராணம் என மெஞ்ஞான விசயங்களை மிக ஆழமாக அறிந்தவர்கள் .
ஊரில் அரூசியா பள்ளியில் நான் தராவீஹ் தொழவைக்கும் காலங்களில் தம்பி ஸுஐபு நூஹ் ஆலிமும் என்னோடு பாட்னராக தொழவைத்தார் . .
பள்ளிக்கு செல்லும்போது தோழிமா வீட்டுக்கு வருவேன் .ஸுஐபு நூஹ் ஆலிமை சைக்கிளில் அழைத்து செல்வேன் . அந்நேரத்தில் அவருக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது . தோழிமா என்னிடம் வாப்பா இவன் அழகாக தொழ வைக்கிறானா ? பெறலி பண்ணுறானா ? நல்லா பாத்துகம்மா , என சொல்லி பக்கத்தில் இருக்கும் அமுல் ஸ்பிரே டப்பாவை திறந்து ஒரு பிடி எடுத்து மகனிடம் கொடுப்பார்கள் . நான் எதுவும் பண்டம் என நினைத்துக் கொள்வேன் . பிறகு பார்த்தால் அது போடி சில்லறை ஏன் தெரியவரும் கையளவு சில்லறை காசை எடுத்து மகனிடம் கொடுத்து , வரும்போது இருவரும் பண்டம் வாங்கி தின்னுங்கோ என்பார்கள் .ஐந்து , பத்து பைசாவாக சுமார் ஆறு ,ஏழு ரூபாய் தேறும் , தராவீஹ் முடிந்து வீடு வரும்போது ஜுபைர் ஸ்டோர் அருகில் இருக்கும் சேகு காக்கா ஹரீரா கடையில் ஹரீரா,
மஞ்சவடை என இருவரும் வெளுத்து வாங்குவோம் , இப்படி தோழிமா பற்றிய “செய்திகளை “ சொல்லிக்கொண்டே செல்லலாம் .
நல்ல பெண்மணிக்கு இலக்கணமாக வாழ்ந்த முத்தாசிமா மாமி தோழிமா அவர்கள் இன்று நம்மை விட்டும் பிரிந்துவிட்டார்கள்.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அண்ணல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி
அன்னாரின் கப்ரை வெளிச்சமாக்கி, விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலேசாக்குவானாக !
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் !
அவர்களது அன்பு மக்களான செய்யித் அஹ்மத் கபீர் காக்கா,தம்பி ஷுஅய்ப் நூஹ் ஆலிம் மஹ்லரி உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன் யா ரப்பல் ஆலமீன் !!!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross