Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:13:49 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14302
#KOTW14302
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 14, 2014
ஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார்! ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4485 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீயின் தாயார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த முத்து ஆஸியா உம்மா என்ற முத்தாசிமா, இன்று 11.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. அன்னார்,

கானா அப்பா என்றழைக்கப்படும் மர்ஹூம் க.மு.க. செய்யித் அஹ்மத் லெப்பை ஆலிம் அவர்களின் மகளும்,

மர்ஹூம் ப.செ.செய்யித் அஹ்மத் அவர்களின் மருமகளாரும்,

காயல்பட்டினம் ஹாஜியப்பா பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் செ.இ.முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,

ஹாஜி எம்.ஏ.கே.செய்யித் அஹ்மத் கபீர் (கைபேசி எண்: +91 98425 48142), ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ (கைபேசி எண்: +91 97900 82663) ஆகியோரின் தாயாரும்,

ஹாஜி எஸ்.ஏ.ஸாலிஹ், மர்ஹூம் கே.எம்.முத்து அஹ்மத், மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், மவ்லவீ ஹாஃபிழ் என்.காஜா பந்தே நவாஸ் மிஸ்பாஹீ, ஹாஜி எச்.எல்.முத்துவாப்பா, ஹாஃபிழ் எம்.ஐ.என்.காஜா ஜவ்ஹர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் சிறிய தாயாரும்,

எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.ஏ.செய்யித் மஃஷூகுர் ரஹ்மான் ஆகியோரின் தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (ஆகஸ்ட் 15) காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

விரிவான விபரம் இதே செய்தியில் விரைவில்...

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 23:15 / 14.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by KADERSHAMUNA (KAYALPATNAM) [14 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36388

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான அழகிய சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம் .அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [14 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36390

அன்புக்குரிய முத்து ஆசிமா மாமி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புகுந்திட நல்லருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் கானா அப்பா செய்யது அஹ்மத் கபீர், சுஐபு நூஹு ஆலிம் , உள்ளிட்ட குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 August 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36391

انا لله و انا اليه راجعون
اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [14 August 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36393

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் ,மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, நாளை மறுமையில் மேலான சுவன பதி தனை கொடுத்து அருள்வானக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் சுஐபு நூஹு ஆலிம் , மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக . ஆமீன் .

அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஸலாம் ..அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by M.N.SULAIMAN (RIYADH) [14 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36394

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நகரின் மூத்த பெண்மணிகளுள் ஒருவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [14 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36395

நமதூரின் மூத்த பெண்மணிகளுள் ஒருவர்...

நகரின் அனைத்துப் பகுதி மக்களைப் பற்றியும், அவர்களின் குடும்பச் சூழல்கள் பற்றியும் ஏராளமாக அறிந்து வைத்திருந்த ஒரு வரலாற்றுப் பெட்டகம்...

காயல்பட்டினம் மட்டுமின்றி, கீழக்கரையிலும் இவர்கள் அபிமானப்பட்ட பலரும், இவர்கள் மீது அபிமானம் கொண்டுள்ள பல குடும்பத்தவர்களும் உள்ளனர்...

எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள்... அதே நேரத்தில் தனது நம்பிக்கைக்கு யாரேனும் உட்பட்டுவிட்டால், அவர்களது வாழ்வில் சிறு சறுக்கல் ஏற்படக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்...

என் தாயாரின் தாயார் மர்ஹூமா செய்யித் ராபியத்தும்மா ஹாஜ்ஜா அவர்களும், இந்த முத்தாசிமா மாமியும் இணைந்து திண்ணையில் அமர்ந்து, மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களாக அரபுத் தமிழ் தஃப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) நூலை ஒருவர் படிக்க மற்றவர் கேட்பதும், இடையிடையே - சிறுவர்களான எங்களின் குறும்புகளைக் கண்டு ரசிப்பதும், ரசனைக்காக அவ்வப்போது ஊர்க்கதைகளைப் பேசி லயித்திருப்பதும், மீண்டும் தஃப்ஸீர் பாடத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்வதும்......

யா அல்லாஹ்! அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நான் கடைசியாகக் கண்டு 25 வருடங்கள் இருக்கும். இனி யாருக்கு கிடைக்கப் போகிறது அந்த கொடுப்பினை...?

எனது 7 வயதில், எங்கள் தோட்டத்தில் முளைத்த கருவேப்பிலை மற்றும் நார்த்தங்காய் ஆகியவற்றை என் தாயாரின் கட்டளையை ஏற்று வீடு வீடாகச் சென்று விற்று வருவேன்... முத்தாசிமா மாமி வீடு வரும்போது, என் நடையின் வேகத்தைக் கூட்டி, விருட்டென கடந்து செல்வேன்... எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது... “அடே வாப்பா ஸாலிஹு! என்னெ பாக்காமெ போறியோ...? உன் உம்மம்மா வரட்டும் சொல்றேன்...” என்பார்கள். எது எதற்கோ அஞ்சியவனாக, அவர்களை நாடி வந்து விடுவேன்.

எளிதில் நடமாடி வேலை செய்ய இயலாத உடல் அமைப்பைக் கொண்ட அவர்கள் என்னிடம் “அதை எடு!” “இதை அங்கே வை” என தொடர் வேலைகளைத் தந்துகொண்டிருப்பார்கள்... எப்படா விடுதலை கிடைக்காது என்று எண்ணியவாறே அவற்றைச் செய்து கொடுப்பேன்...

எல்லாம் முடிந்த பிறகு, அக்காலத்தில் யாரும் எளிதில் தந்து விட முடியாத 2 ரூபாய் நோட்டை நான் மறுக்க மறுக்க, மலர்ந்த முகத்துடன் என் கையில் திணிப்பார்கள்.

என் தாயார் தந்த மொத்த கருவேப்பிலையை விற்றாலும் மொத்தம் 1 ரூபாய் 50 பைசாதான் கிடைக்கும். இவர்கள் தந்த 2 ரூபாயைக் கையில் வாங்கிய பிறகு, மீண்டும் அழைக்க மாட்டார்களா என மனம் ஏங்கும்...

நமதூரின் பெரும் செல்வந்தர்கள் கூட எளிதில் செய்யாத தர்மத்தையெல்லாம் இவர்களும், இவர்களது மகனார் ஷுஅய்ப் ஆலிம் அவர்களும் நிறைய செய்திருக்கிறார்கள். இவர்களின் மூத்த மகனார் செய்யித் அஹ்மத் கபீர் மாமா அவர்கள், மஹல்லாவில் யாருக்கு எது என்றாலும் - எதைப் பற்றியும் கவலைப் படாமல் முன்னுக்கு நிற்பவர்கள்.

இவர்களது கணவர் மர்ஹூம் முஹம்மத் அப்துல் காதிர் மாமா அவர்கள் - நமதூர் ஹாஜியப்பா தைக்கா பள்ளியில் பல்லாண்டு காலம் இமாமாக இருந்து கட்டிக் காத்தவர்கள்.

கணவருக்கும், மனைவியாருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களையே பல கதைகளாகத் தொகுத்து எழுதலாம். அத்தனை ரசனைக்குரியது...

நல்ல பெண்மணிக்கு இலக்கணமாக வாழ்ந்த முத்தாசிமா மாமி அவர்கள் இன்று நம்மை விட்டும் பிரிந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களது அன்பு மக்களான செய்யித் அஹ்மத் கபீர் மாமா, ஷுஅய்ப் நூஹ் ஆலிம் காக்கா உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

உங்கள் துக்கத்தில் இணைந்து பங்கேற்றவனாக,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.A.Mohamed Sulaiman (chennai) [14 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36398

இன்னலிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனம் நல்லருல்வானாஹா ஆமீன் மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொறுமையை நல்லருல்வானாஹா ஆமீன் அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Makkah) [14 August 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 36399

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by D. Muhammad Shameem (Hong Kong) [14 August 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36401

انا لله و انا اليه راجعون


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அல்லாஹ் உன் அழைப்பை ஏற்றார் !அவர் மீது அருள்மாறி பொழிந்திடுவாய் !
posted by K.V.A.T.HABIB (Qatar) [14 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36402

எங்கள் தாயாரின் தாயார் (மர்ஹூமா ஹாஜர் முத்து கண்ணுமா) மூலம் எனக்கு கிடைத்த தாய்மார்கள் விரல் விட்டு என்னும் அளவு தான். அதில் ஓரோர் இடமும் ஒருசில வளர்ப்பு முறையில் என்னை என் சிறுவயது பிராயத்தில் என்னை செப்பணிட்டார்கள் என்றே சொல்லி ஆகணும். அந்த அளவுக்கு என்னை பெற்ற புள்ளையாகவே கருதி , செய்யது அஹமது கபீர் காக்கா (கானா அப்பா ) , தம்பி ஷுஐப் நூஹு ஆலிம் அவர்களோடு என்னையும் தன் புள்ளையாகவே கருதினார்கள்.

அந்த காலத்து அழகிய தரையோடு தரையாக இருக்கிற வண்ணம் புனைந்த ஜன்னல் வைத்த பழைய வீடு . நான் ஒடி ஆடி விளையாடிய அந்த அழகிய இரண்டு பெரிய வீட்டில் மர்ஹூம கதிஜா பெருமாவும் , முத்தாசிமா பெருமாவும் என்னை தனி கவனம் கொண்டு, சோறு வூட்டி விட்டு, வேலா வேலைக்கி மார்க்கம் சம்பந்தமான படிப்பினையை தந்து, சபையில் கூச்சம் இல்லாமல் ஓதுவதற்கும் பயிற்சி தந்து (வீட்டில் நடக்கும் பெண்கள் ஹல்க்காகளில் வைபவங்களில் சிறிய புள்ளையாகிய என்னையும் இருத்தி ஓத வைத்து) அழகு பார்த்தவர்கள்.

இதுவெல்லாம் அவர்களின் இயற்கையான குணத்தின் வெளிப்பாடு. இன்றைக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற நாம் செய்கின்ற நற்காரியங்களுக்கு அவர்களும் இட்ட உரம் தான் , இன்று நற்காரியங்களின் செயலாக உருவெடுத்து இருக்கிறது .அந்த பசுமையான நினைவுகள் என் மனதில் நிழலாக வந்து என்னை கண்களால் கசிய வைக்கிறது. ஊர் வந்தும் அவர்களை பார்க்காமல் வந்து விட்டேனே என்று என் மனது வருந்துகிறது.

யா அல்லாஹ்...மர்ஹூமா தாய் முத்தாசிமா அவர்களை உன் ரஹ்மாத்தால் பொருந்திக்கொள்! அவர்களின் மண்ணறையை விசாலமாக , குரானின் நூரைக்கொண்டும் பிரகாசமாக ஆக்கிக்கொடு ! அவர்களின் நல் அமல்களை மறுமையில் மீஜானில் அதிக பாரமாக ஆக்கி , அதன் பொருட்டால் பெருமானார் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் திருக்கரம் பற்றியவர்களாக , மேலான சுவனபதி அடையச் செய் ரஹ்மானே !

யா அல்லாஹ் ...அவர்களை பிரிந்து வாடும் அருமை காக்கா, தம்பி மற்றும் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை வழங்குவாயாக ! அனைவரும் சப்ர் செய்யுமாறு அன்போடு வேண்டுவதோடு , எங்களின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் அனைவர்க்கும் உண்டாவதாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed salih (chennai) [14 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36404

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான அழகிய சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம் .அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்னையில் இருந்து ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [14 August 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36406

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re: இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...
posted by S.A.Mohammed Ismail Bilali (Dubai) [14 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36407

அஸ்ஸலாமு அலைக்கும்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

என் அருமை மாமி முத்தாசிமா அவர்களின் மறைவு என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமில்லாமல், அதிகம் அதிகம் சலவாத்தையும் ஓத வைத்துவிட்டது. காரணம் அவர்கள் ஒரு விஷயம் பேசிகிட்டு இருக்கும் போது இடையில் ஏதாவது மறந்துட்டா உடனே சலவாத்தை ஓதுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சீதேவியை நம் சமுதாயம் இழந்து தவிக்கிறது.

எல்லாம் வல்ல ரஹ்மான், மர்ஹூமா அவர்களுக்கு எல்லா அருள் பாக்யங்கலையும் நிறைவாக வழங்கி, மண்ணறையை சுவன பூஞ்சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் சுவர்கத்தில் உயர்த்த தரஜாக்களை வழங்கி அருள்புரிவானாக ஆமீன்..

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நடந்துவிட்ட இழப்புக்கு நாம் எல்லோரும் சபூர் செய்ய கடமைபட்டிருக்கிறோம். அல்லாஹ் எங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்து அமைதியை அருள போதுமானவன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [14 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36408

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by netcom buhari (chennai) [14 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36409

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (DXB) [14 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36413

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை அருள்வானாக . ஆமீன்

அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36414

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் <<<<.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் மன்னித்து . '' ஜன்னத்துல் பிர்தௌஸ் '' என்னும் மிகவும் உன்னதமான '' அழகிய சுவன பதியை'' கொடுத்து தருவானாகவும் ஆமீன்.

மர்ஹும் குடும்பத்தார்கள் யாவர்களுக்கும் எங்கள் ஸலாம் .

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. السلام عليكم ورحمة الله وبركاته
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [14 August 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36415

நமது குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த தூண் சாய்ந்து விட்டது. நமதூரின் மூத்த பெண்மணிகளுள் ஒருவர்... எனது அருமை தாயாரின் மிகவும் நெருங்கிய நண்பி . என் அருமை தோழிமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு சிறந்த பெண் ஆலிமா !
சிறந்த வணக்கசாலி !
ஈகை உள்ளம் கொண்டவர் !
மார்க்க விசயங்களில் மிகவும் பேணுதல் உடையவர் !
குடும்ப விசயங்கள் , பழைய காலத்து சரித்திரங்கள் , சன்மார்க்கத்தின் நுணுக்கமான ,தெளிவான விசயங்களை மிகவும் அறிந்தவர்கள் ! .

ஆழமான ஞாபக சக்தி உள்ளவர்கள் !
யாரையும் தேடி செல்லமாட்டார்கள் . அவர்களின் உடல் அமைப்பும், தேக ஆரோக்கியங்களும் அப்படி !

ஆனால் அவர்களை அனைவரும் தேடி வருவார்கள் ! வந்தவர்களுக்கு வயிறு நிறைய தீனும், உள்ளம் நிறைய (Dheenum) கிடைக்கும்!

அல்லாமா நஹ்வி அப்பா , சொளுக்கார் அப்பா , கண்ணாடி ஆலிம் மற்றும் பெரும்பெரும் உலமாக்களின் சரித்திர நிகழ்வுகளை அறிந்து வைத்துகொண்டு அதனை பிறருக்கும் மிகவும் விருப்பமாக சொல்லிக் காட்டுவார்கள்

அரபுத் தமிழ் தஃப்ஸீர் (திருக்குர்ஆன் விளக்கவுரை) , புர்தா ,வித்ரியா , வேதப் புராணம் என மெஞ்ஞான விசயங்களை மிக ஆழமாக அறிந்தவர்கள் .

ஊரில் அரூசியா பள்ளியில் நான் தராவீஹ் தொழவைக்கும் காலங்களில் தம்பி ஸுஐபு நூஹ் ஆலிமும் என்னோடு பாட்னராக தொழவைத்தார் . .

பள்ளிக்கு செல்லும்போது தோழிமா வீட்டுக்கு வருவேன் .ஸுஐபு நூஹ் ஆலிமை சைக்கிளில் அழைத்து செல்வேன் . அந்நேரத்தில் அவருக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது . தோழிமா என்னிடம் வாப்பா இவன் அழகாக தொழ வைக்கிறானா ? பெறலி பண்ணுறானா ? நல்லா பாத்துகம்மா , என சொல்லி பக்கத்தில் இருக்கும் அமுல் ஸ்பிரே டப்பாவை திறந்து ஒரு பிடி எடுத்து மகனிடம் கொடுப்பார்கள் . நான் எதுவும் பண்டம் என நினைத்துக் கொள்வேன் . பிறகு பார்த்தால் அது போடி சில்லறை ஏன் தெரியவரும் கையளவு சில்லறை காசை எடுத்து மகனிடம் கொடுத்து , வரும்போது இருவரும் பண்டம் வாங்கி தின்னுங்கோ என்பார்கள் .ஐந்து , பத்து பைசாவாக சுமார் ஆறு ,ஏழு ரூபாய் தேறும் , தராவீஹ் முடிந்து வீடு வரும்போது ஜுபைர் ஸ்டோர் அருகில் இருக்கும் சேகு காக்கா ஹரீரா கடையில் ஹரீரா, மஞ்சவடை என இருவரும் வெளுத்து வாங்குவோம் , இப்படி தோழிமா பற்றிய “செய்திகளை “ சொல்லிக்கொண்டே செல்லலாம் .

நல்ல பெண்மணிக்கு இலக்கணமாக வாழ்ந்த முத்தாசிமா மாமி தோழிமா அவர்கள் இன்று நம்மை விட்டும் பிரிந்துவிட்டார்கள்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அண்ணல் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி

வ ஸல்லம்) மற்றும் நல்லோர்கள் , நாதாக்கள் , வலிமார்கள் ,சாளிஹீன்கள் ஆகியவர்களோடு இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் கப்ரை வெளிச்சமாக்கி, விசாலமாக்கி , கேள்வி கணக்கை இலேசாக்குவானாக !

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ! அவர்களது அன்பு மக்களான செய்யித் அஹ்மத் கபீர் காக்கா,தம்பி ஷுஅய்ப் நூஹ் ஆலிம் மஹ்லரி உள்ளிட்ட - மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன் யா ரப்பல் ஆலமீன் !!!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் hi
posted by Naseem (Srilanka) [14 August 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36417

எல்லாம்வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனத்தில் சேர்ப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [14 August 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 36419

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Firdous (Dubai) [14 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36420

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [14 August 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 36421

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் ,மர்ஹூமா அவர்களின் பிழைதனை பொறுத்து, நாளை மறுமையில் மேலான சுவன பதி தனை கொடுத்து அருள்வானக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் சுஐபு நூஹு ஆலிம் , மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக . ஆமீன் .

அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஸலாம் ..அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Thajul Anam (madina munawara ksa) [14 August 2014]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 36422

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூன்

எனது மாமி வபாத் செய்தி அறிந்து வருத்தம் அடைதேன் வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவிஐ கொடுதருல்வனாக அமீன் .

மர்ஹூமா குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் சபுரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை கொடுதருல்வனாக அமீன் .

அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்

மதீனா முனைவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Abdul Hadhi (JEDDAH . Al Ruwais) [14 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36423

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான அழகிய சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஸலாம் .அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அப்துல் ஹாதி. ஜெட்டாஹ் .KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு மாமூனா லெப்பை (தோஹா) [14 August 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36424

யா அல்லாஹ்!

மர்ஹூமா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, மன்னிப்பளிப்பாயாக!

இவர்களுக்கு அருள் புரிவாயாக! இவர்களது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர்களைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!

வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மை செய்வதைப் போல் இவர்களைக் குற்றத்திலிருந்து தூய்மை செய்வாயாக! இவர்களின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - வசந்தமாக – சுவனத்துப் பூங்காவனமாக ஆக்குவாயாக! இவர்களைக் கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

இவர்களின் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக!

இவர்களுக்கு அங்கு மிகச் சிறப்பான நல்வாழ்வை வழங்குவாயாக! இவர்களின் பிரிவால் துயருறும் இவர்களது மகன்கள், பேத்திகள், பேரன்கள், தோழிகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை அதிகமதிகம் நல்குவாயாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மூத்த தூண் சாய்ந்து விட்டது.
posted by Abuthahir.mik (Holy mecca) [14 August 2014]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 36426

நமதூரின் வரலாறுகள்,வலிமார்களின் சரித்திரங்கள், நமதூர் பெரியவர்கள் பற்றிய குறிப்புகள். திருமண விழாக்களில் தேவைப்படும் அந்த குடும்ப பாரம்பரியம் பற்றிய தகவல்கள், ஏன்? மரண அறிவிப்பு சொல்லுவதற்கு கூட தேவைப்படும் குடும்ப உறவு முறைகளை கேட்டுத் தெரிந்துக் கொள்ள வருபவர்களுக்கு தேவைப்படும் குறிப்புகளின் அளவை விட அதிகமாகவே சொல்லி கொடுப்பதை நானும் பார்த்து இருக்கிறேன்.

மார்க்க சம்பந்தமாக பேசும் போது கடிகார முள் அவர்களை எச்சரிப்பதே இல்லை. ஆனாலும் அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும் மற்றவர்கள் எப்போது முடியும் என்று கேலியாக கேட்டால் அதற்கு உதாரணமாக அவர்கள் சொல்லும் பதில்(சிலருக்கு மௌலிது ஓதும் நேரம், சிலருக்கு மௌலிதும்,ஹிகாயத்தும் ஓதும் நேரம், சிலருக்கு அதோடு பெரிய,சிறிய துஆ ஓதும் நேரம்) என்று நான் நேரம் குறித்து இருக்கிறேன் என்று சொல்லுவார்கள்.

வீட்டுக்கு வருபவர்களை நன்கு உபசரித்து அவர்களிடம் துஆ செய்யுங்கள் என்று பலமுறை சொல்லுவதோடு,நிறைவாக அவர்களுடன் ஸலாம் கொடுத்து, அவர்கள் விடை பெறும் போது கூட மீண்டும் ஒரு முறை துஆ செய்யுங்கள் என்று சொல்லி விடை பெறும் இவர்கள் இன்று நம்முடன் விடை பெற்று வல்லோனின் கட்டளைக்கு இணங்க இறையடி சென்று விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ்,

எனது வப்பிச்சா மர்ஹூமா முத்து ஆஸியா உம்மா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக... ஆமீன்.

வல்லோனின் கட்டளைக்கு இணங்க சபூர் செய்தவனாக,

Mik. செய்யிது அபூதாஹிர்
புனித மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [15 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36428

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்ற இறை வார்த்தைக்கு நிகராக வேறு எந்த ஆறுதல் வார்த்தையும் இல்லை.எல்லோரும் அவன் பக்கம் மீளுபவர்களாகவே உள்ளோம்.எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவர்களது மக்கள் செய்யது அஹ்மது காக்கா மற்றும் என் இனிய சகோதரர் சுஐபு நூஹு ஆலிம் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் இரங்கலையும் ஸலாமையும் தெர்வித்து கொள்கிறேன். அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையுடன் அமைய இறைஞ்சுவோமாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...Condolence
posted by S.D.Sego Abdul Cader (Quede Millath Nagar) [15 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36430

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. அஸ்ஸலாமு அலைக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ¬Á£ý வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [16 August 2014]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 36447

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான அழகிய சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

ஷுஅய்ப் ஆலிம் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். .அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லை வ பராகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
posted by Seyed Ahmed Kabeer & Shaib Nooh Mahlari (Kayalpatnam) [30 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36893

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்களன்புத் தாயார் அவர்கள் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம்.

நேரிலும், தொலைபேசி வழியாகவும், இணையதளங்களின் மூலமாகவும் தாங்கள் யாவரும் தெரிவித்துள்ள இரங்கல் செய்திகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களது மக்களாகிய எங்களிடம் தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம். அதை நிறைவேற்ற நாங்கள் யாவரும் ஆயத்தமாக உள்ளோம்.

வீட்டில் அதிகளவில் பொதுமக்கள் வந்து சென்றுகொண்டிருந்த காரணத்தால், உரிய நேரத்தில் இக்கருத்தைப் பதிவு செய்ய இயலாமற்போனதற்காகவும் வருத்ததம் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன், அல்ஹாஜ் எம்.ஏ.கே.செய்யித் அஹ்மத் கபீர் (+91 98425 48142) மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ (ஹாங்காங்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved