இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்திலுள்ள காவல்துறை மைதானத்தில் விடுதலை நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவி குமார் தேசிய கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், விடுதலைப் போராட்ட தியாகிகளை அவர் கண்ணியப்படுத்தியதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சிறந்த முறையில் பணியாற்றிய காவல்துறை வீரர்களுக்கும் அவர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை உடனிருந்தார்.
இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |