இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் நகராட்சியில் இன்று காலை 09.15 மணியளவில் சுதந்திர தின விழா நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், ஆணையர் ம.காந்திராஜ் முன்னிலையில் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நெறிப்படுத்தினார்.
துவக்கமாக, விழாவிற்குத் தலைமை தாங்கிய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தேசிய கொடியேற்றி வைத்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை முன்மொழிய அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்கின் உரையை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, கே.ஜமால், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், நகரப் பிரமுகர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், நகரின் பொதுநல ஆர்வலர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில், காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நகராட்சி மூலம் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டவர்களுக்கு சுதந்திர தின விழாவின் போது சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு சுதந்திர விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 11:55 pm / 17.08.2014]
|