கத்தர் நாட்டிற்குச் சென்றுள்ள ஜித்தா காயல் நல மன்றத் தலைவர் குளம் அஹ்மத் முஹ்யித்தீனுக்கு, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் - அதன் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா தலைமையில், இம்மாதம் 14ஆம் நாள் வியாழக்கிழமையன்று, கத்தர் ஆசியானா ஹோட்டலில் வரவேற்பளிக்கப்பட்டது.


ஜித்தா காயல் நல மன்றத்தின் சேவைகள் குறித்து விளக்கியும், கத்தர் காயல் நல மன்றத்தின் சேவைகளைப் பாராட்டியும் ஜித்தா மன்றத் தலைவர் பேசினார்.
நகர்நலன் குறித்த பொதுவான அம்சங்களில் உலக காயல் நல மன்றங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன. நிறைவில், மதிய உணவு உண்டவர்களாக அனைவரும் கலைந்து சென்றனர்.

தகவல் & படங்கள்:
கத்தரிலிருந்து...
சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் என்ற சேம்ஸா மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
(உள்ளூர் பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|