சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீனின் மாமனார் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த எம்.கே.பீ.முஹம்மத் உமர், இன்று அதிகாலை 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66. அன்னார்,
மர்ஹூம் பனம்பழம் காழீ அலாஉத்தீன் அவர்களின் பேரனும்,
மர்ஹூம் எம்.கே.எஸ்.டி.மஹ்மூத் பிள்ளை லெப்பை அவர்களின் மகனும்,
மர்ஹூம் வாவு கே.எம்.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் எம்.கே.பீ.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ், ஹாஜி எம்.கே.பீ.முஹம்மத் முஹ்யித்தீன், மர்ஹூம் எம்.கே.பீ.முஹம்மத் அன்வர், ஹாஜி எம்.கே.பீ.முஹம்மத் ஆரிஃப் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி எஸ்.இ.செய்யித் இப்றாஹீம் ஹாஜி வாவு எஸ்.எச்.அன்ஸாரீ, வாவு எஸ்.எச்.காழீ அலாவுத்தீன் ஆகியோரின் மச்சானும்,
எஸ்.ஐ.ஸலீம் என்பவரின் சகளையும்,
ஹாஜி எம்.ஓ.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +966 50 868 9377), எம்.ஓ.மஹ்மூத் ரியாஸ் (தொடர்பு எண்: +91 999 422 5186) ஆகியோரின் தந்தையும்,
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் ஹாஜி சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீனின் (தொடர்பு எண்: +966 50 249 5090) மாமனாரும்,
ஜெ.செய்யித் ஐதுரூஸ், ஜெ.உமர் முஹ்ஸின், ஜெ.முஹம்மத் முஆத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் முஹம்மத் அலீ
குத்துக்கல் தெரு |