ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிறப்பு அழைப்பின் பேரில் பார்வையாளர்கள் வரவழைக்கப்பட்டு, பிறை குறித்து விளக்கும் கருத்தரங்கம் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரின் 6ஆவது அமர்வு, இம்மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை 17.00 மணி முதல் 22.30 மணி வரை, காயல்பட்டினம் ஹாஜியப்பா பள்ளி எதிரிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸின் ஹனியா அரங்கில் நடைபெற்றது.
மவ்லவீ அப்துல் லத்தீஃப் உமரீ, மவ்லவீ ஜுபைர் ஃபிர்தவ்ஸீ முஹம்மதீ ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
“பிறை குறித்து, குர்ஆன் - ஹதீஸ் கூறுவதென்ன?” எனும் தலைப்பில் மவ்லவீ முஹம்மத் கடாஃபீ உரையாற்றினார்.
அது தொடர்பான பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு மவ்லவீ அப்துர்ரஷீத் ஸலஃபீ விளக்கமளித்துப் பேசினார்.
நிகழ்ச்சி இடைவேளையின்போது, அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், உள்ளூரில் காணப்பட்ட பிறை அடிப்படையில் செயல்படுவோர், உலகில் எங்கேனும் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் செயல்படுவோர் உட்பட பலர் கலந்துகொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
S.அப்துல் வாஹித்
ஹிஜ்ரீ கமிட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |