இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இம்மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இந்நாளையொட்டி, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியில், அன்று காலை 10.00 மணியளவில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலாளர் பி.எம்.ரஃபீக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.
பள்ளியின் நிறுவனர் வழக்குரைஞர் அஹ்மத் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். துளிர் பள்ளி நலனுக்காக உடலாலும், பொருளாலும் ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
துபை காயல் நல மன்ற உறுப்பினர் முனவ்வர் ஷக்காஃப், துளிர் பள்ளியின் சிறப்புக் குழந்தைகளுக்கு இனிப்பும், குளிர்பானமும் வழங்கினார். பின்னர், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் சிறப்பழைப்பாராக சில நிமிடங்கள் பங்கேற்ற ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
துளிர் பள்ளி திட்ட ஒருங்கிணைப்பாளர் சித்தி ரம்ஸான் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
நிகழ்ச்சியின் நிறைவில், காவாலங்கா சார்பில், துளிர் பள்ளிக்கு ப்ளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
நடப்பாண்டு சுதந்திர தின விழா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் பள்ளியின் சார்பில் கடந்தாண்டு (2013) நடத்தப்பட்ட சுதந்திர தின விழா தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துளிர் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |