காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.
9ஆம் ஆண்டு நிகழ்ச்சி, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” எனும் தலைப்பில், 21.06.2014 சனிக்கிழமையன்று காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா:
அன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருடன் மாநில சாதனை மாணவர்கள் சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், 19.30 மணிக்கு, பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன.
சிறந்த பள்ளிகளுக்கு விருதுகளும், பணப்பரிசுகளும்:
இவ்விழாவில், நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும், நகரளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கும் பணப்பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விரிவான விபரம் வருமாறு:-
100 சதவிகித தேர்ச்சி:
நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், காயல்பட்டினம்
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 132 மாணவியரும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 109 மாணவியரும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 27 மாணவியரும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய 20 மாணவியரும்,
100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதனைப் பாராட்டி, கடந்த 21.06.2014 அன்று, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) நடைபெற்ற “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” பரிசளிப்பு விழா நிகழ்ச்சியின்போது, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் - அப்பள்ளிகளுக்கு தலா ரூபாய் 2 ஆயிரத்து 500 பணப்பரிசும், விருதும் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் வழங்க, அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் சார்பில் அதன் ஆசிரியை பெற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் வழங்க, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியின் சார்பில் அதன் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் அதன் ஆசிரியை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வழங்க, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பள்ளிகளுக்கு பணப்பரிசு மற்றும் விருதுகள்:
கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதிய - காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்களுள்,
பள்ளியின் மொத்த தேர்ச்சி சதவிகிதம்,
முதல் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம்,
1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியரின் எண்ணிக்கை
உள்ளிட்ட - நிர்ணயிக்கப்பட்ட கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டு, பரிசுக்குரிய பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலீ அவற்றை வழங்கினார்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி 435 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் முதலிடம் பெற்றது. அதற்காக விருதை அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
எல்.கே.மேனிலைப்பள்ளி 405 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் இரண்டாமிடம் பெற்றது. அதற்கான விருதை அப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் பெற்றுக்கொண்டார்.
அரசு மகளிர் மேனிலைப்பள்ளி 401 புள்ளிகளைப் பெற்று, மொத்த பள்ளிகளுள் மூன்றாமிடம் பெற்றது. அதற்கான விருதை அப்பள்ளியின் ஆசிரியை பெற்றுக்கொண்டார்.
பின்னர், 75க்கும் மேல் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் ஒரு பிரிவாகவும், 75க்கும் கீழ் மாணவ-மாணவியரைக் கொண்ட பள்ளிகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, அவற்றுள், முதலிடம் பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
75க்கும் மேல் மாணவியரைக் கொண்ட சுபைதா மகளிர் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 235.79 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பா.ரெத்னம் அவற்றை வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா பெற்றுக்கொண்டார்.
75க்கும் கீழ் மாணவியரைக் கொண்ட பிரிவில், எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி 285 புள்ளிகள் பெற்று, அப்பிரிவில் முதலிடம் பெற்றது. இதற்காக, அப்பள்ளிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், விருதும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலக துணை ஆய்வாளர் சங்கரய்யா அவற்றை வழங்க, அப்பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறாக, சிறந்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ – பரிசளிப்பு விழா நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ நிகழ்ச்சியில், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள், பணப்பரிசுகள் வழங்கப்பட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |