ஆறுமுகனேரியில் காவல் நிலையம் அருகில் தனிப்பிரிவு தலைமைக் காவலரை தாக்கியதாக 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
குரும்பூர் அருகேயுள்ள புறையூரைச் சேர்ந்தவர் ரகு (40). இவர், ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராக உள்ளார்.
வியாழக்கிழமை இரவு ஆறுமுகனேரி பேயன்விளையைச் சேர்ந்த சுகதேவ், ரகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேச வேண்டும்,
காவல் நிலையத்துக்கு வெளியேதான் நான் இருக்கிறேன் எனக் கூறி உள்ளார். இதையடுத்து வெளியே வந்த ரகுவை சுகதேவ், பேயன்விளையைச்
சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் இருவர் கம்பியால் தாக்கினர். இதையடுத்து ரகுவின் சத்தத்தை கேட்ட அருகிலிருந்தவர்கள் மற்றும் காவலர்கள்
அங்கு சென்றனர். இதற்கிடையே 4 பேரும் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
இம்மாதம் 20 ஆம் தேதி சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் அருகே தகராறு செய்ததாக சுகதேவ் உள்ளிட்ட 4 பேர் மீது அந்நிறுவனம் அளித்த
புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தலைமைக் காவலர் ரகுதான் காரணமெனக் கருதிய சுகதேவ் உள்ளிட்ட 4 பேர் வியாழக்கிழமை இரவு காவல் நிலையம் அருகிலுள்ள
வாரச்சந்தையில் வைத்து ரகுவை தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த ரகு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகனேரி காவல்நிலைய ஆய்வாளர் முத்துசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இவ்வழக்கு தொடர்பாக காயல்பட்டினம் மங்களவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயபாண்டி மகன் பழனி (32) என்பவரை பிடித்து போலீஸார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்:
தினமணி
|