செய்தி எண் (ID #) 14368 | | |
திங்கள், ஆகஸ்ட் 25, 2014 |
காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 5597 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (42) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினருமான ஹாஃபிழ் எம்.என்.புகாரீ தந்தை, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த ஹாஜி பி.மஹ்மூத் நெய்னா, இன்று காலை 11.00 மணியளவில், தூத்துக்குடியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 73. அன்னார்,
மர்ஹூம் மா.மு.புகாரீ அவர்களின் மகனும்,
மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் கிண்ணி வெட்டி செய்யித் இஸ்மாஈல் ஆலிம் அவர்களின் மருமகனாரும்,
காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீ (தொடர்பு எண்: +91 91718 46184, +91 98844 38740), எம்.என்.அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 98400 68377), எம்.என்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் தந்தையும்,
பி.அஹ்மத் ரஃபீக் (தொடர்பு எண்: +91 99620 53025) என்பவரின் சகோதரரும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர் (தொடர்பு எண்: +91 91718 46184, +91 98400 89979), காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் எஸ்.ஐ.அபூபக்கர் (தொடர்பு எண்: +91 98405 79447), எஸ்.ஐ.அஹ்மத் மீரான், எஸ்.ஐ.முஹம்மத் ஷாஃபிஈ, எஸ்.ஐ.அப்துல் மதீன், எஸ்.ஐ.அப்துல்லாஹ் ஆகியோரின் மச்சானும்,
எஸ்.ஐ.நூஹ் என்பவரின் மாமனாரும்,
பி.மஹ்மூத் ஹிஷாம், பி.முஹம்மத், ஏ.சி.மஹ்மூத் ஜுஹைர் ஆகியோரின் தந்தையின் தந்தையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஆகஸ்ட் 26) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
A.S.புகாரீ
[கூடுதல் தகவல் & படம் இணைக்கப்பட்டது @ 20:55 / 25.08.2014] |