Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:23:59 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14363
#KOTW14363
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 23, 2014
காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில், கோட்டைச் சுவர் அகற்றம்! பதட்டம் முடிவுக்கு வந்தது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8411 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கே.எம்.டி. மருத்துவமனைக்கு அருகிலுள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென கோவில் ஒன்று அமைக்கப்பட்டது. இது குறித்த சர்ச்சை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு அதன் ஓலைக் கூரை கட்டுமானம் தீப்பற்றி எரிந்ததாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் ஹாலோ ப்ளாக் கற்கள் கொண்டு ஒரு சிலர் உடனடியாக கோயிலைக் கட்டியுள்ளனர். தகவலறிந்து காவல்துறையினரும் நிகழ்விடம் வந்து குவிந்தனர். எனினும் கட்டிடப் பணிகள் உ.டனடியாக நிறுத்தப்படவில்லை.





இதனைக் கண்டித்து, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள், அடைக்கலபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.

இரு தரப்பிலும் ஆறு பேர் அழைக்கப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை தலைமையில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 11.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிறைவில்,

“காயல்பட்டினம் தென்பாகம் கிராமம், புல எண் 494 நெடுஞ்சாலைத் துறை புறம்போக்கில் அமைந்துள்ள மாவு இசக்கியம்மன் கோவில் மற்றும் திரு. வாவு செய்யது அப்துல் ரஹ்மான் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள மதில் சுவரையும், நெடுஞ்சாலைத் துறை மூலம் இன்றே அகற்றிட கீழே கையொப்பமிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.”

என ஒப்பந்த வாசகம் வடிவமைக்கப்பட்டு, இரு தரப்பினரும் அதன் கீழ் கைச்சான்றிட்டனர்.

ஒப்பந்த நகல்





ஒப்பந்தப் படி, இன்று 16.00 மணியளவில், திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் முன்னிலையில் நிகழ்விடத்தில் ஆக்கிரமிப்புகள் முறைப்படி அளக்கப்பட்டது.



அதன் தொடர்ச்சியாக, 16.15 மணியிலிருந்து 17.15 மணி வரை, ஆக்கிரமிப்பிலுள்ள கோட்டைச் சுவர் மற்றும் கோயில் ஆகியன முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.





















பதட்டம் துவங்கியதிலிருந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரை, நிகழ்விடத்தைச் சுற்றி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளால் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்களுள் உதவி:
A.K.இம்ரான்
மற்றும் ஹாஃபிழ் S.A.ஃபைஸல்


இது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok) [23 August 2014]
IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 36580

We appriciate the action taken by Cheif Minister of Tamil Nadu Madam,Jayalaitha in the maintaining the comunial hormony in the secular state

Best regards
Sayna - Thai Nadu - Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by o.a.nazeer ahmed (chennai) [23 August 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36582

அல்ஹம்துலில்லாஹ்..நீண்ட naal பிரச்னை முடிவுக்கு வந்தது..இரு சமுஹதினருக்குள் பிரச்னை எப்போதும் உருவஹா ஒரு kaaraniyaha இருந்த இந்த விவஹர்ரம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் நிம்மதி...

இந்த நல்ல முடிவுக்கு பாடுபட்ட அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் கண்களில் நீர் ததும்ப நன்றியை தெரிவிக்க்றேன்..

கடந்த கல கசப்பான உண்மையையும் இந்த நல்ல நேரத்தில் தெரிவிக்க வேண்டும்... சில வருடங்களுக்கு முன்னால் நமதூர் தனவந்தர் ஒருவர் இந்த பிரச்னையை சம்பந்த பட்டவர்ஹளுடன் பேசி நல்ல ஒரு முடிவை எட்டி அதற்கஹா ஏற்பாடு செய்த தொஹையை சம்பந்த பட்டவர்ஹளிடம் கொடுக்காமல் ஏமாற்றிய நமதூரை சேர்ந்த ஒரு அரசியல்வதியைதன் இந்த நேரத்தில் நினைத்து பார்கிறேன்...

நல்லவர்ஹல் முயற்சித்தாலு நடுவில் உள்ள யாரைப்ற்றியும் கவலைபடாத ஊர் பாசம் இல்லாத சில சுயனலமிஹலல்தான் இந்த பிரச்னை இவ்வழு நாள் நீடித்து இப்போது நல்ல முடிவுக்கு வந்துள்ளது....

நல்ல முடிவு வர காரணமாய் இருந்த இரு தரப்பினரையும் நன்றியோடு நினைத்து பார்கிறேன்...பாடுபட்ட அணைத்து அரசு அலுவலர்ஹளுக்கு நன்றி...அல்லா அனைத்தும் அறிந்தவன்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shahul hameed sak (malaysia) [23 August 2014]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 36583

அல்ஹம்துலில்லாஹ்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. புரியாத புதிர்!
posted by Hameed Rifai (jeddah ksa) [23 August 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36587

என் மனதில் எழும் சில கேள்விகளை இங்கே வெளிப்படுத்த விரும்புகிறேன்...

(1) நள்ளிரவில் கோயில் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் அதைக் கண்டறிந்ததாகக் கூறும் கோயில் தரப்பினர், காவல்துறையிடம் உடனடியாக புகார் அல்லவா அளித்திருக்க வேண்டும்? அதை விட்டுவிட்டு, கூரையால் வேயப்பட்ட கோயில் (?) எரிந்ததற்காக கல்லால் ஏன் கட்ட வேண்டும்?

(2) அதிகாலை 6 மணிக்கே ஹாலோ பிளாக் கல், மண், பிளாஸ்டிக் டேங்கில் தண்ணீர் எல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. ஊர் மக்களெல்லாம் கண் விழிப்பதற்கு முன்பே இந்த ஊரில் அப்படி யார் கடை திறந்து வைத்து, இப்பொருட்களை விற்பனை செய்தது?

(3) இல்லையில்லை... நாங்க முன்னாடியே பொருட்களை வாங்கி விட்டோம் என்றால், கூரைக் கோயில் எரிக்கப்படுவது அவர்களுக்கு முன்பே தெரியுமா???

இவ்வளவும் இருந்தபோதிலும், விரும்பத்தகாத எந்த நிகழ்வுகளும் நடக்காத நிலையில் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வந்த அரசு அதிகாரிகள், அதற்கு ஒத்துழைத்த இரு தரப்பினருக்கும், இந்த மண்ணின் மைந்தன் என்ற தார்மிக உரிமையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா. துரை அவர்களே..! தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [23 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36588

தக்கதருணத்தில் நகரில் அமைதியை விரும்பும் அணைத்து பொதுநல அமைப்புக்கள் - சமூக சிந்தனை ஆர்வலர்கள் மற்றும் நகரின் அணைத்து சமய சகோதரர்கள் பொது மக்கள் அனைவர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு பிரச்சனைக்குரிய ஒரு தீய கூட்டத்தின் நடவடிக்கையை எதிர்த்து சாலையில் களமிறங்கி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை அவர்களின் கவனத்திற்க்கும் பார்வைக்கும் எடுத்துரைத்து மா.துரை அவர்களின் அதிரடியான ஆலோசனையில் - நியாயமான அணுகுமுறையில் அமைதியை விரும்பும் நகர மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. மா.துரை அவர்களுக்கும் அவர்களின் கீழ் பணிபுரியும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி... நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Mohideen (Riyadh) [23 August 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 36589

அல்ஹதுலில்லாஹ் இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும் அவர்கள் ஊர்வலமாக போகும் பண்டிகை வர இருக்கிறது அந்த சமயம் ஊரின் மத ஒற்றுமை பாதிக்காமல் இருக்க அரசு துறையின் தகுந்த பாதுகாப்பை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். நம் பெண்கள் தனியாக வெளிஊர்களுக்கு செல்வதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மாற்றுமத சகோதரர்களாகிய மத நல்லிணக்க மாந்தர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [24 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36591

அல் ஹம்திலில்லாஹ்! நமக்குள் அரசியல் முதல் ஆன்மீகம் வரை எத்தனை வகையான இரு கருத்துக்கள் இருந்தாலும் அது எப்படிப்பட்ட தீவிரத்தன்மையுடன் சில நேரங்களில் கொழுந்துவிட்டு எரிந்தாலும் அத்தனையும் நமதூருக்குள், நம்மின மக்களுக்குள் நடக்கின்ற மனமாட்ச்சரிய சம்பவங்கள் தான். அந்த தற்காலிக கருத்து வேற்றுமை காலமெல்லாம் நீருபூத்த நெருப்பாய் நிலைத்து நிற்கும் என்று தப்புக்கணக்குப் போட்ட சதிகார எண்ணமுடையவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடியாக அனைத்து காயல் சகோதரர்களும் கைகோர்த்து களத்தில் நின்ற காட்சி!

இந்த ஒற்றுமைபோதும் நமதூரைக்காக்க, நம் மக்களுக்கு வரவிருக்கின்ற அபாயத்தை நீக்க,,எந்த நேரத்திலும் நாங்களனைவர்களும் ஒருதாய்ப்பெற்ற பிள்ளைகளாய் ஒன்றுசேர்ந்திடுவோம் என்பதை இவ் உலகிற்கு பறைசாற்றி விட்டோம் .இந்த ஒற்றுமை உணர்வை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் உணர்த்திய வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்!

காயல்மா நகரத்தில் இப்படியொரு கட்டுப்பாடான ஒற்றுமையா?புற்றீசல்கள் போல் எங்கிருந்துதான் பறந்து வந்ததோ இந்த படை என்று பேசாமடந்தையாய் பிரமித்து நின்றார்களாம் வெளியூர் சகோதரர்களும், காவலுக்கு நின்ற காவலர்களும்,என்கின்ற செய்திகள் தேனாராய் எங்கள் இதயத்தில் பாய்ந்து இனித்தெடுத்து விட்டது..மாஷா அல்லாஹ்!.

இப்படை பலத்தால் இனி எந்த கவலையும் கொள்ளாதே இனிய காயல் சகோதரா. உனக்கொரு அநியாயம் என்றால் ஓராயிரம் கைகள் உதவிக்கு ஓடோடிவரும் இனி நம்மூரைக் காக்க நாம் எடுக்கும் எந்த ஒரு நடுநிலை செயலுக்கும் எப்போதும் வெற்றி,வெற்றி வெற்றியே தான்!.

இப்பிரச்சனை எத் தரப்பின் மனமுறிவும் மனக்கசப்பும் இல்லாமல் முடிவடையும் முயற்சியில் முனைந்த மாற்றுமத சகோதரர்களாகிய மதநல்லிணக்க மாந்தர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஹக்கும்,பாத்திலும் !!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [24 August 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36592

அஸ்ஸலாமு அலைக்கும்!!!

எப்படியோ, ஒரு தெளிவான , இறுதியான முடிவு ஒன்று வந்துள்ளது ! அல்ஹம்துலில்லாஹ் !!!

இதில் பல விசயங்கள் அறியமுடிகின்றது .

அடுத்தவரின் நிலமாக இருக்கட்டும், அரசாங்க நிலமாக இருக்கட்டும் , புறம்போக்கு நிலமாக இருக்கட்டும் ! அதனை ஆக்கிரமிப்பதை அரசாங்கம் அனுமதிக்கின்றதோ , இல்லையோ , கண்டிப்பாக அல்லாஹ்வும் , ரசூலும் அனுமதிக்கவில்லை !

ஹக்கு கோட்டை சுவரோடு போனது !

பாத்தில் அடியோடு தரைமட்டமானது !

இப்போராட்டத்தில் அணைத்து அகீதாக்கள், கொள்கைகள் , இயக்கங்கள் இணைந்திருக்கின்றன !

ஊர் நலன் என வரும்போது இந்த இணைப்பும், இணைவும் அவசியம் (முன்னாள் நடைபெற்ற “ஓடக்கரை “ சம்பவத்தை உதாரணமாக கொள்ளலாம் ) .

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் . ஆனால் அகீதா ரீதியில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என நினைப்பது “ஹதீஸின் “ ஒளியில் சாத்தியமற்ற ஒன்று !

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான , சீரான வாழ்வை தந்து, வழியை காட்டி , எல்லா விதமான ஆபத்துகளை விட்டும் , நம்மையும், நம் ஊரையும் பாதுகாப்பானாக ! ஆமீன் !

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by sameer (Kayalpatnam) [24 August 2014]
IP: 8.*.*.* United States | Comment Reference Number: 36594

Alhamdhulillah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. KIndly disable Comment Section for this kind of news
posted by Muthu Magdoom (Jeddah) [24 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36595

KIndly disable Comment Section for this kind of news


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [24 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36597

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>>>> மாஷா அல்லாஹ் .<<<<<<

எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஒருமை பட செயல் ஆற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் & நமது நண்பன் என்று சொல்லகூடிய நம் மரியாதைக்குரிய காவல் துறை அதிகாரிகளுக்கும் எங்களின் இதயம் கலந்த நன்றினை கூறிக்கொள்ள நாங்கள் யாவர்களும் கடமை பட்டு உள்ளோம் ............தேங்க்ஸ் ......

ஒற்றுமை என்பதும் ../ பொறமை என்பதும் .../ பழி வாங்கும் எண்ணம் என்பதும் .../ கலவரத்தை தூண்டுவது என்பதும் நம் மனதில் ( எண்ணத்தில் ) தான் உள்ளது .....நாம் மற்றவைகளை ஓரம் தள்ளி விட்டு ....ஒற்றுமை என்கிற நல்ல எண்ணத்தை மற்றும் மனதில் கொண்டாள் .....அது தான் நம்மை நல்ல முறையில் வழிநடத்தி செல்லும் ......நாம் செல்லும் பாதையும் வெற்றியாகவே அமையும் & .....நம் மனதிலும் அமைதி கிடைக்கும் .......

ஒற்றுமையான இந்த நல்ல முடிவை நாம் யாவர்களும் மனதாரவே ..... வரவேற்போமாக .......

>>>>>> அல்ஹம்துலில்லாஹ்..<<<<<<

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே ........................ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...அல்ஹம்துலில்லாஹ்...
posted by omer anas (DOHA QATAR.) [24 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36598

அல்ஹம்துலில்லாஹ்... எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே...! பலரும் பல நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள்.அதில் ஹாமித் ரிஃபாயியின் ஆதங்கமும் கேள்வியும் நமக்குள்ளும் எழத்தான் செய்தது. நன்றி...! தம்பி,,,

வல்ல இறைவன் நிரந்தர தீர்ப்பை நல்லோருக்கு வழங்க வேண்டி,ஆத்திரமும்,அவசரமும் சூழ்ச்சியும் கொண்டோரின் கைகளிலேயே தொடங்க வைத்து,அடே ஆத்திரக்காரா,,,,, உனக்கு புத்தி மட்டமடா,,, அவசரபட்டியே ,,, அடே,,,அவசரக்குடுக்கை,,,,அடேசூழ்ச்சிக்காரா, (மத நல்லிணக்கத்துக்கு முன் உதாரணமாகத்திகளும் காயளுக்கே)சூழ்ச்சி செய்திட நினைத்தாயே,,,நானல்லவா சூழ்ச்சியாலனுக்கு எல்லாம் சூழ்ச்சியாளன் என்று நிரந்தரமான நடு நிலையான தீர்ப்பை வழங்கி விட்டான் பாருங்கள்..! அல்ஹம்துலில்லாஹ்.

ஊருக்காக ஒன்றுபட்டு உழைத்த அனைத்து உத்தமர்களுக்கும்,பதட்ட சூழ்நிலையிலும்,பதறாமல் காரியம் ஆற்றிய அனைத்து பொது சேவையாளர்களுக்கும்,மாற்றுமத நல்லோருக்கும்,நியாயமாகவும்,கண்ணியமாகவும் நடந்து மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நடந்து கொண்ட உயர் எண்ணம் கொண்ட அதிகாரிகளுக்கும்,,நன்றி நன்றி நன்றி...!

என்றும், வல்லோனின் தீர்ப்புக்கு நன்றி கூறியவண்ணம்,,
உங்கள் உமர் அனஸ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [24 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36599

மதநல்லினகத்திர்க்கும், சமூக ஒற்றுமைக்கும் வித்திட்ட சிறுபான்மைமக்களின் காவலர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட அரசு நிர்வாகத்திற்கும், காயல்பட்டினவாழ் பொதுமக்களுக்கும் என் நெஞ்சான நன்றியை தெருவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by IMTIAZ AHMED ISMET (Abu Dhabi) [24 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36600

Assalaualiku. Alhamdulialh. All things went well by the grace of Almighty Allah.For the achivement of this good deeds we have to appricate the Officials who are all participated in acheving the good deal.

In my opinian we can make Appriciation/Thanks letter to the officials and the same has to be signed by as much signatures from the pubilc. It shows our good-will in resolving the communal harmoney

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [24 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36601

படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும்.

அடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், கோட்டாட்சியர், காவல் ஆய்வாளர், காவல் துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து சமாதான உடன்படிக்கையில் ஈடுபட்டு நல்லிணக்கத்துடன் முடிவு கண்ட இரு சமூகத் தலைவர்களுக்கும் அனைத்து அமைப்புத் தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Moderator: கருத்து நிறைவு செய்யாமல் (infinitive ஆக) அனுப்பப்பட்டுள்ளதால், சில சொற்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Naseem (Srilanka) [24 August 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36612

அல்ஹம்துலில்லாஹ்!

பல நாட்களாக இருந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது.நமக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஊர் நலனுக்காக ஒன்றுபட்டு எல்லாரும் ஒன்றாக இணைந்து அசம்பாவிதத்திலிருந்து நம் ஊர் பாதுகாக்கபட்டிருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷம்.எல்லாம்வல்ல இறைவன் இனியும் எந்த அசம்பாவிதங்கலும் நடந்துவிடாமல் மென்மேலும் ஊரையும் ஊர்மக்களையும் பாதுகாப்பானாக ஆமீன்.

குடிசை நெருப்பு பிடித்தால் மீண்டும் குடிசையைக்கொண்டல்லவா புனர்நிர்மாணம் செய்திருக்கவேண்டும். ஹாலோப்லோக் கல் எங்கிருந்து வந்தது?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved