மஹாராஷ்டிர மாநிலம் - புனே நகரின் மாணவர் மேம்பாட்டுச் சங்கம் (Studens Development Society) சார்பில், 2013 நவம்பர் 26ஆம் நாளன்று - தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி மற்றும் வண்ணம் தீட்டும் போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
எல்.கே.ஜி. முதல் 09ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்காக நடத்தப்பட்ட இப்போட்டிகளில், கையெழுத்துப் போட்டியில் 234 மாணவ-மாணவியரும், வண்ணம் தீட்டும் போட்டியில் 398 மாணவ-மாணவியரும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 08ஆம் வகுப்பு மாணவி கே.ஆர்.கதீஜத் நூரிய்யா கையெழுத்துப் போட்டியில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். அவருக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவ்விரு போட்டிகளிலும் பங்கேற்ற எல்.கே.மெட்ரிக் பள்ளியின் பின்வரும் மாணவியருக்கு 2013ஆம் ஆண்டிற்கான கலா கவுரவ் விருது வழங்கப்பட்டுள்ளது:-
(1) ஓ.ஓவியா – 03ஆம் வகுப்பு
(2) ஜி.ஷாம்னி - 06ஆம் வகுப்பு
(3) கே.ஆர்.கதீஜத் நூரிய்யா – 08ஆம் வகுப்பு
(4) எம்.ஜெய்சி கரோலின் - எல்.கே.ஜி.
இந்நான்கு மாணவியருக்கும் சிறந்த கையெழுத்துக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
(5) எம்.எம்.செய்யித் சுஹைல் - 01ஆம் வகுப்பு
(6) ஐ.கே.ஃபாத்திமா முகர்ரமா - 04ஆம் வகுப்பு
(7) எம்.ஆமினா ஃபரீதா - 05ஆம் வகுப்பு
(8) எம்.எஸ்.ஃபாத்திமா ஹமீதா – 09ஆம் வகுப்பு
இந்நான்கு மாணவ-மாணவியருக்கும் சிறந்த வண்ணம் தீட்டலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
பரிசு மற்றும் விருதுகளைப் பெற்ற மாணவ-மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |