தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவிலான போட்டிகளில் காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
திசையன்விளையிலுள்ள வி.வி.பொறியியல் கல்லூரியின் சார்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்கள் அளவில் - பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் இம்மாதம் 19, 20 நாட்களில் நடைபெற்றன.
இப்போட்டிகளில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 22 பேர் பங்கேற்றனர். அவர்களுள்,
ஆங்கில பேச்சுப் போட்டியில் - அஹ்மத் முன்ஷிரா,
தமிழ் கட்டுரைப் போட்டியில் - எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா,
ஆங்கில கட்டுரைப் போட்டியில் - ஜெ.மர்யம் ரஷீதா
ஆகிய மாணவியர் இரண்டாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு, தலா ரூபாய் ஆயிரம் பணப்பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதிக பரிகளைப் பெற்றமைக்காக, இப்பள்ளிக்கு சுழற்கேடயமும், 2 கிராம் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பரிசு பெற்ற மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |