புதிய தலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் இன்றிரவு 7:30 மணிக்கு காயல்பட்டினத்தில் புற்று நோய் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து செய்தி! இணையதளத்தில் நேரடியாக காணலாம்!!
கடந்தாண்டு அக்டோபர் 26 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் தமிழகத்தில் - காயல்பட்டினம் உட்பட பல பகுதிகளில் புற்று நோய் அதிகரித்துள்ளது குறித்து - தகவல்கள் வழங்கப்பட்டன.
அந்நிகழ்ச்சியின் தொடராக - ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு பிறகு நிலவும் சூழல் குறித்து தொடர்ச்சி நிகழ்ச்சியாக, இன்று மாலை 7:30 மணியளவில் - புதிய தலைமுறையில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
சுமார் 1 மணி நேர நீளமான ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி - நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படும். நிகழ்ச்சியினை நேரடியாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இணையதளத்திலும் (www.puthiyathalaimurai.tv) காணலாம்.
அஸ்ஸலாமு அழைக்கும் !
இந்த நிகழ்ச்சியினை பார்த்தேன் !
கண்ணீர் விட்டு அழுது விட்டேன் !
இந்த கொடிய நோய்களின் தாக்கத்தை விட்டும் எப்போது தான் நம்மக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமோ ?
எந்த முடிவுக்குத்தான் நம்மால் வரமுடியும் ?
நோயை தரும் அந்த ரப்புல் ஆலமீன்தான் இந்த கொடிய நோயை நீக்கும் ஆற்றல் உடையவன் !
இந்த கருத்தை எழுதும்போதே என்னை அறியாமலேயே எனது இருகரங்களும் அந்த அணைத்து ஆற்றல் உடைய அல்லாஹ்விடம் முறையிடுவதை உணர்கிறேன் !
யா அல்லாஹ் ! உன்னால்தான் முடியும் !
இக்கொடிய நோயிலிருந்து எம் அனைவரையும் பாதுகாப்பாயாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross