தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளையிலுள்ள பிஷப் ஆசாரியா மேனிலைப்பள்ளியில், இம்மாதம் 14ஆம் நாளன்று வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் சார்பில் பங்கேற்ற மாணவியருள், 07ஆம் வகுப்பு மாணவி எஸ்.சுமய்யா ஸல்மா நீளம் தாண்டும் போட்டியில் இரண்டாமிடமும், உயரம் தாண்டும் போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார். அதே வகுப்பைச் சேர்ந்த எம்.எஸ்.எல்.ஜுலைஹா அஃப்ரா, 11ஆம் வகுப்பைச் சேர்ந்த ஜெ.ரம்யா ஆகியோர் வட்டு எறிதல் போட்டியின் இரண்டு பிரிவுகளில் மூன்றாமிடங்களைப் பெற்றுள்ளனர்.
பரிசு மற்றும் விருதுகளைப் பெற்ற மாணவ-மாணவியரை, பள்ளி தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |