செய்தி எண் (ID #) 14364 | | |
ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014 |
உள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தி முகவரின் மனைவி காலமானார்! ஆக. 25 மாலையில் நல்லடக்கம்!! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 4859 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (40) <> கருத்து பதிவு செய்ய |
|
உள்ளூர் இணையதளமான KayalConnection.com-இன் முதன்மைச் செய்தி முகவர் ஜெ.முஹம்மத் லரீஃபின் (+91 98421 83419) மனைவி ஏ.எச்.ரஹ்மா பீவி 24.08.2014 அன்று 20.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 47. அன்னார்,
காயல்பட்டினம் தைக்கா தெரு பாக்கர் ஆலிம் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஊண்டி முஹம்மத் உமர் அவர்களின் மகன்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் முஹம்மத் ஹஸனா லெப்பை அவர்களின் மகள்வழிப் பேத்தியும்,
மர்ஹூம் கம்பல்பக்ஷ் பாக்கர் ஆலிம் அவர்களின் பேத்தியும்,
மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.அப்துல் ஹலீம் அவர்களின் மகளும்,
மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஜெ.ஏ.ஜலீல் அவர்களின் தம்பி மனைவியும்,
கம்பல்பக்ஷ் ஜெ.ஏ.முஹம்மத் லரீஃபின் மனைவியும்,
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகளும்,
மர்ஹூம் ஊண்டி எம்.ஓ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஊண்டி எம்.ஓ.புகாரீ, ஊண்டி எம்.ஓ.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகோதரர் மகளும்,
கே.ஷாஹுல் ஹமீத் என்பவரின் மைத்துனர் மகளும்,
எஸ்.எச்.ரியாஸ், எஸ்.எச்.மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர்ரஹ்மான், எஸ்.எச்.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் மச்சியும்,
எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர், எஸ்.எம்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன், எஸ்.எம்.ஜெ.இக்பால் ஆகியோரின் சிறிய தாயாரும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் உமர், எஸ்.ஏ.கே.அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, 25.08.2014 (இன்று) மாலையில், காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியிலுள்ள இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, 17.00 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
மற்றும்
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:46 / 25.08.2014] |