இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் - பி.எஸ்.என்.எல். சார்பில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நேற்றும் (ஆகஸ்ட் 25), காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியருகில் இன்றும் (ஆகஸ்ட் 26) மெகா மேளா நடைபெற்றது.
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய உதவி பொறியாளர் நம்பிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த மேளாவில், இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நேசம் கோல்ட்’ திட்டத்தின் கீழான சிம் கார்டு ரூபாய் 20 மதிப்பில் வழங்கப்பட்டது.
ரூபாய் 750 பொருத்துக் கட்டணம் கொண்ட லேண்ட்லைன் புதிய விண்ணப்பங்கள், ரூபாய் 500 சலுகைக் கட்டணத்தில் பெறப்பட்டது.
ரூபாய் 250 கட்டணத்தில் வழங்கப்படும் ப்ராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்புகள் எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கப்பட்டன.
மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி திட்டம் மூலம், பிற நிறுவனங்களிலிருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாறும் வசதியும் செய்துகொடுக்கப்பட்டது.
பி.எஸ்.என்.எல். சேவைத் திட்டங்களை விளக்கும் பிரசுரங்களும் இந்த மேளாவில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
பி.எஸ்.என்.எல். மெகா மேளா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |