கடலூர் நகராட்சி ஆணையர் காளிமுத்து நடைப்பயிற்சிக்குச் சென்ற இடத்தில் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 26 - செவ்வாய்க்கிழமை) காலையில், நகராட்சி நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குற்றவாளிகளை இன்று (ஆகஸ்ட் 27) மாலைக்குள் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில், நாளை (ஆகஸ்ட் 28) வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் சிவகுமார், நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பி, சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், மேலாளர் பிச்சை மெய்தீன் உள்ளிட்ட - காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளும், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தகவல் & படம்:
M.ஜஹாங்கீர்
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |