இந்திய ஹஜ் குழு மூலம் இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் செய்த பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்களில் பலருக்கு - கடந்த சில மாதங்களாக, வெவ்வேறு தருணங்களில், இடம் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஹஜ் குழு தற்போது மேலும் சில இடங்களை - காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி தமிழக விண்ணப்பதாரர்கள் 18 பேருக்கு (காத்திருப்போர் பட்டியலில் 255 வது இடம் முதல் 272 வது இடம் வரை) இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் - மீதி தொகையை அவர்கள் உடனடியாக வங்கியில் செலுத்தி, அதற்கான ரசீதினை செப்டம்பர் 1ம் தேதிக்குள் மாநில ஹஜ் குழுவிடம் சமர்பிக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross