ஐந்தாமாண்டு வினாடி-வினா போட்டி:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
ஐந்தாமாண்டு போட்டி, 22.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இதுகுறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
பங்கேற்ற மொத்த அணிகள்:
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 13 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 14 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 15 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 25 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 113 அணிகளில் 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.
போட்டி நடத்துநர்:
புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி இப்போட்டியை நடத்தினார்.
நுழைவுப் போட்டி:
முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.
நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.
இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:
பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்ததன் மூலம்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்
என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
மதிப்பீட்டாளர்கள்:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.
கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.
எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:
நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.எஸ்.செய்யித் அஹ்மத்,
இசட்.எச்.ஸஈத் அலீ,
எம்.ஐ.ஹபீப் முஹம்மத்
ஆகியோரடங்கிய அணி 55 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது.
இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.
5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாமிடம்:
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
பி.விக்னேஷ்,
எஸ்.என்.ஸதக் துஃபைல்,
எஸ்.லட்சுமி நாராயணன்
ஆகியோரடங்கிய அணி 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.
இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, விழாவில் முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் மூத்த உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.
மூன்றாமிடம்:
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
பாளையம் நஃபீஸத் ஆமினா,
எம்.ஏ.சி.ஃபாத்திமா ஹுமைரா,
எஸ்.எச்.அஹ்மத் தஸ்னீம்
ஆகியோரடங்கிய அணி 45 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.
இவ்வணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முன்னிலை வகித்த - இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்கினார்.
இதர 3 அணிகள்:
இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் சான்றிதழ் பெற்ற இதர 3 அணிகள்:-
எல்.கே.மெட்ரிக் பள்ளியின்
எஸ்.டீ.ஆயிஷா ஹுஸ்னா
எம்.எஸ்.ஹமீதா நாஃபிஆ
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
பி.கோகுல் சந்திரா
எஸ்.எம்.கஸ்ஸாலி மரைக்கார்
பி.சுபாஷ்
மற்றும் அதே பள்ளியின்
கே.ஹம்ஸத் ஸதக்கத்துல்லாஹ்
ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்
பி.அப்துல் ஹமீத்
இவ்வணியினருக்கு, கடந்த ஆண்டில் வினாடி-வினா போட்டியை நடத்திய காயல்பட்டினம் எல்.டீ.இப்றாஹீம் சான்றிதழ்களை வழங்கினார்.
நினைவுப் பரிசுகள்:
பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, வினாடி-வினா போட்டியை நடத்திய நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பார்வையாளர்களுக்கும் பரிசுகள்:
போட்டியில், 6 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
ஏற்பாடு:
போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் ஹுஸைன் ஹல்லாஜ், இக்ராஃ கல்விச் சங்க மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோருடன், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், இக்ராஃ அலுவலக முன்னாள் பொறுப்பாளர் காதிர் சுலைமான் மற்றும் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.
கடந்தாண்டு (2013) கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |