இம்மாதம் 31ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் வழியாக விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
ஊர்வலம் தொடர்பான விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர துணைச் செயலாளர்களான எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர தலைவர் ஷம்சுத்தீன், துணைத்தலைவர் ஹனீஃப், துணைச் செயலாளர் அபூதாஹிர், பொருளாளர் ஜப்பான் சுலைமான், செய்கு ஹுஸைன் பள்ளியின் நிர்வாகிகளான இஸ்மத், செய்கு ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், ஆறுமுகநேரியிலிருந்து வரும் விநாயகர் சிலை ஊர்வலம் காயல்பட்டினம் மகாத்மா காந்தி வளைவைக் கடக்கையில், அருகிலுள்ள செய்கு ஹுஸைன் பள்ளி, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், ஊர்வலத்தில் வரும் மாற்று மதத்தினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பவோ, சைகை காட்டவோ கூடாது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன்
கடந்தாண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |