கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைகளுக்கு சென்னை வரும் காயலர்கள் - குறுகிய காலத்திற்கு சென்னையில் தங்க KCGC அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அல்லாஹ் கூறுகிறான் : ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை(இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்: 16:97)
அன்பிற்குரிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாக வல்லோன் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு தமது பணிகளை செவ்வன செய்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னை வரும் காயலர்களுக்கு உரிய வழிகாட்டுகிறோம். பல்வேறு வகைகளில் நமதூர்வாசிகளுக்கு எத்தனையோ நல்ல வழிகாட்டல்களை வழங்கி இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனி எதிர் வரும் காலங்களில் காயலர்கள் மென்மேலும் பயன்பெறும் வகையில் செயல்பட விரும்புகிறோம்.
அதனடிப்படையில், சென்னை மண்ணடியில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக சென்னைக்கு வரும் காயலர்களுக்கு சிறிது நாட்கள் தங்கி, அவர்களது தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள எமது அலுவலகத்துடன் ஒரு தற்காலிக தாங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கும் நபர்களுக்கான விதிமுறைகள்:
* தங்கும் அறைகளில் ஓரே நேரத்தில் அதிகபட்சமாக மொத்தம் 10 நபர்கள் மட்டுமே தங்க வசதியுண்டு. (காயல்பட்டணத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும்)
* கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக தங்க வருபவர்கள், ஊரிலிருந்து வரும்போதே கே.சி.ஜி.சி-ன் உள்ளூர் பிரதிநிதியாகிய (PRO) சகோதரர் N.S.E மஹ்மூத் (+91 97863 42923) அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.
* காயல்பட்டணம் அல்லாத வேறு ஊரிலிருந்து கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வரும் “காயலர்கள்” கே.சி.ஜி.சி உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் சிபாரிசு / பரிந்துரை கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும்.
* அறைகளில் தங்க வரும் நபர்கள், தங்களது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை (Passport, Driving License, Voters Id, Adhaar Card & etc) ஏதேனும் நகல் ஒன்றை கண்டிப்பாக அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்காக வருபவர்கள் நாளொன்றுக்கு ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கு முன்பணமாக (Advance) ரூ. 250 அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
* மருத்துவ காரணங்களுக்காக வருபவர் கட்டணம் ஏதுமின்றி தங்கிக்கொள்ளலாம்.
* அறைகளில் சமையல் (சாப்பாடு, டீ, சுடு தண்ணீர்) செய்வதற்கு அனுமதி இல்லை.
கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வருபவர்கள் எத்தனை நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம்?
நமதூரிலுள்ள காயல் நல மன்றகள், சங்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் ஆகியோர் சென்னைக்கு வரும்போது மறவாமல் நமது KCGC அலுவலகத்திற்கு வருகைத் தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும், KCGC அலுவலகம் மற்றும் தங்கும் விடுதி தொடர்பான தகவல்கள் பெற இதனடியில் தரப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஹைதர் உசேன் – (நிர்வாக அலுவலர்) : +91 87544 09169.
நாம் பிறந்த ஊருக்கும், நமது சொந்தங்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்து வர வல்ல அல்லாஹ் நம்மவர்களுக்கு நல்லருளை தருவானாக ஆமின்.
உளத்தூய்மையுடன் இறைத்திருப்தியையும் மறுமை இலக்கையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றிட வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மேலும் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம்யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்...
தங்களன்புச் சகோதரன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|