இம்மாதம் 31ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் வழியாக விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
ஊர்வலம் தொடர்பான விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நகரின் ஜும்ஆ பள்ளிகளில் பொதுமக்களுக்கு அறிவிப்பாக கூறப்பட்டது.
ஊர்வலம் நடக்கும் நேரத்தில், யாரும் நிகழ்விடத்தில் நிற்க வேண்டாமெனவும், வழமையாக அவ்விடத்தில் நிற்போர் கூட அந்நேரத்தில் மட்டும் அங்கிருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெற முஸ்லிம்கள் ஒருபோதும் காரணமாகி விட வேண்டாமென்றும், அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில், கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ உரையாற்றுகையில் கேட்டுக்கொண்டார். தொழுகை நிறைவுற்ற பின் மீண்டும் அதுகுறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.
நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |